வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நேரில் வந்து வச்சிக்கிறேன்.. விடாப்பிடியாய் பகத் பாசில் லோகேஷ்க்கு அனுப்பிய பரிசு

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து  விக்ரம் படத்தில் அதிரிபுதிரி பண்ணிவிட்டார். அத்துடன் நான்கு வருடங்களுக்குப் பிறகு உலகநாயகனை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்களும் திரையரங்கில் அலை மோதுகின்றனர். இதனால் விக்ரம் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 350 கோடிக்கு மேல் குவித்து அசத்தியது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு நாலாபக்கமும் இருந்து பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே உலகநாயகன் இதுவரை நடித்த எந்த படத்திலும் இப்படி ஒரு பெயர் அவருக்கு கிடைக்காததால் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்பட்டதுடன்  மகிழ்ச்சியில் படக்குழுவினர்களுக்கு பரிசுப் பொருட்களை வாரி இறைத்தார்.

குறிப்பாக லோகேஷ் கனகராஜிக்கு கமலஹாசன் 70 லட்சம் மதிப்பிலான காரை வழங்கியுள்ளார். இது லோகேஷ்-க்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாம். இந்நிலையில் விக்ரம் படத்தில் கலக்கிய இன்னொரு கதாபாத்திரம் ஏஜென்ட் அமர். இந்த கதாபாத்திரத்தில் ஏஜென்ட் அமராக பகத் பாசில் மிரட்டியிருப்பார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இன்னும் விக்ரம் படத்தை பார்க்காத ஒரே நபர்  பகத் பாசில் தான். அவர் படத்தை இரண்டு நாட்கள் முன்னர் தான் பார்த்திருக்கிறார். பார்த்து விட்டு எதுவும் சொல்லவில்லையாம். நான் நேரில் வந்து வச்சுக்கிறேன்’ என்று மறைமுகமாக பகத் கூறிவிட்டாராம்.

அதுமட்டுமின்றி ஒரு கடிதம் அடங்கிய வாட்சை பரிசாக அனுப்பி உள்ளாராம். விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருப்பதால் அவர் அடுத்ததாக இயக்கும் தளபதி 67  படத்திற்கான அப்டேட்டும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை லோகேஷ் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு தேவையான அத்தனை உதவிகளையும் கமலஹாசன் லோகேஷ்-க்கு செய்து தருவதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். கூடிய விரைவில் இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் தன்னுடன் மீண்டும் விக்ரம் 2 படத்தில் இணைய வேண்டும் என ஆர்வத்துடன் கூறியிருப்பது லோகேஷ்-க்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக அதைப் பார்த்தார்.

Trending News