ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் இரண்டு பிரிவுகளாக இருந்தார்கள். ஒன்று மெயின் ஹீரோயின் இன்னொன்று கிளாமர் ஹீரோயின்கள். அதாவது மெயின் ஹீரோயின்கள் படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடுவது குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிப்பது மட்டும் தான் செய்வார்கள். மாறாக அவர்கள் கவர்ச்சி காட்ட தயங்கினார்கள்.
அதனால் கவர்ச்சிக்காகவே கிளாமர் ஹீரோயின்கள் தனியாக இருந்தார்கள். படம் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு குத்துப்பாட்டு இருக்கும். அதனால் அதில் கவர்ச்சியாக நடனமாட இந்த நடிகைகளை பயன்படுத்தினார்கள். இந்த நடிகைகள் கவர்ச்சி நடனம் தவிர கவர்ச்சியான கேரக்டரிலும் நடித்து வந்தார்கள்.
அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான கிளாமர் நடிகைகள் என்றால் அது ஜெயமாலினி, குயிலி, ஜெயச்சித்திரா, சில்க், டிஸ்கோ சாந்தி போன்றவர்கள். இவர்களுக்காக படம் பார்க்க ரசிகர்கள் வந்த நாட்களும் உண்டு. இதில் நடிகை சில்க் மிகவும் பிரபலம். இவரின் அழகில் மயங்காத ஆண்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு கிளாமர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் நாளடைவில் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. பிற்காலத்தில் வந்த ஹீரோயின்கள் அவர்களே கிளாமர் சீன்களில் நடிக்க தொடங்கினார்கள்.
கவர்ச்சி நடனத்தையும் ஹீரோயின்களே ஆடியதால் கிளாமர் நடிகைகளுக்கு வேலை இல்லாமல் போனது. அந்த வரிசையில் நடிகைகள் நிரோஜா, ராதா, பானுப்பிரியா, ரம்யா கிருஷ்ணன், பல்லவி போன்ற நடிகைகள் அவர்களின் படங்களில் அவர்களே கவர்ச்சி காட்டியதோடு குத்தாட்டமும் போட தொடங்கினார்கள்.
தயாரிப்பாளர்களும் எதற்கு தனியாக கிளாமர் நடிகை என்று கூறி அதை தவிர்க்க தொடங்கினார்கள். இதனால் கிளாமர் நடிகை கலாச்சாரம் சிறிது சிறிது குறைந்து தற்போது இல்லாமலே போய்விட்டது.