புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியின் படத்தில் ஏற்பட்ட சலசலப்பு.. 14 வருடங்களுக்குப் பின் குப்பையை கிளறிய கிளாமர் நடிகை!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் வாசு இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த், அசோக்குமார் என்ற பிரபல சினிமாக்காரர் ஆகவே நடித்திருப்பார்.

இந்தப்படத்தில் அசோக் குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தான், இருவருக்கும் ஃபர்ஸ்ட் நைட் என வடிவேலுக்கு அந்த படத்தில் கிளாமர் நடிகை சோனா கட்டுப்பாடு விதித்தார். இந்தப்படத்தில் வடிவேலு மற்றும் சோனா இருவரின் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது பற்றிய விபரத்தை 14 வருடங்களுக்குப் பிறகு சோனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் வடிவேலுக்கும் சோனாவிற்கும் சுத்தமாகவே செட்டாகவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த படத்தில் நடித்திருக்கிறாராம். வடிவேலுக்கு போட்டியாக அந்த காலத்தில் இருந்த விவேக்குனும் சோனா, ‘குரு என் ஆளு’ என்ற படத்திலும் நடித்து இருப்பதைப் பற்றி ஒப்பிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

ஏனென்றால் சோனா விவேக்குடன் நடிக்கும்போது மிகவும் பிடித்து நடித்ததாகவும், நடிப்பில் தனக்கு தெரியாத நுணுநுணுக்கங்களை கற்றுத்தந்ததுடன் அந்த படத்தில் பெண் வேடமிட்டு விவேக், தன்னை விட அழகாக இருந்ததுடன் அந்தப் படத்தில் சோனாவின் கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் என ‘இதை செய் ஒர்க் அவுட் ஆகும்’, ‘அது நன்றாக இருக்கும்’ என மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டவராக விவேக் சோனாவை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் வடிவேலு அப்படி அல்ல என்று சோனா குசேலன் படத்தில் கஷ்டப்பட்டு நடித்தது குறித்து இப்பொழுது பேசியிருக்கிறார். மேலும் சினிமாவில் நுழையும்போது கிளாமர் நடிகையாக வந்ததால் அவரால் வில்லி, குணச்சித்திர நடிகையாக வளர முடியவில்லை.

இதற்கிடையில் இவருக்கு ஏழு வருடமாக காதலித்த காதல் தோல்வி வேறு. இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த சோனா, தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரோஜா, அபி டெய்லர் போன்ற முன்னணி சீரியல்களில் வில்லியாக நடிக்கத் துவங்கியுள்ளார். அதுமட்டுமின்றி நிறைய சீரியல்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் தற்சமயம் வரிசையாக கமிட்டாகிக் கொண்டிருக்கிறார்.

Trending News