சினிமாவைப் பொருத்தவரை கவர்ச்சி மட்டும் தான் ஒரே வழி என பல நடிகைகள் மார்க்கெட் இருக்கும் வரை தன்னால் முடிந்த வரை கவர்ச்சி காட்டி சம்பாதித்து செட்டிலாகி விட வேண்டும் என நினைக்கின்றனர்.
அதுவும் சமீப காலமாக கவர்ச்சி காட்டாமல் நடிக்கும் நடிகைகளில் யார் என்று தேடினால் கண்ணுக்கெட்டிய வரை யாருமே தெரியவில்லை. அனைவருக்குமே பிரதானமாக இருப்பது கவர்ச்சி தான்.
இப்போது மட்டும் இல்ல. அந்த காலங்களிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. என்னதான் நல்ல நல்ல திறமையான நடிகைகள் வலம் வந்தாலும் இன்றுவரை நாம் அனைவரும் அதிகமாக பேசுவது சில்க் ஸ்மிதாவை பற்றி தான்.
இப்படி கவர்ச்சி நிறைந்த இந்த சினிமா உலகத்தில் கவர்ச்சி காட்டாமல் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் மூலமும் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்த நடிகைகளில் குறிப்பாக இந்த நான்கு பேரைச் சொல்லலாம்.
நடிகை ரேவதி, என்றும் இளமை நதியா, தல அஜித் மனைவி ஷாலினி, எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியா ஆகிய இந்த நான்கு நடிகைகள் கவர்ச்சியை நம்பாமல் கதாபாத்திரங்களை நம்பி தன்னுடைய அழகான முக வசீகரத்தாலும் துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தனர்.

இவர்கள் அனைவருமே முன்னணி நடிகைகளாக அந்தந்த காலகட்டங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகையால் கவர்ச்சி மட்டுமே சினிமா இல்லை என்பதை புரிந்துகொள்ள இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ.