முதல் பாகத்தை விட எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்த இல்லத்தரசிகளும் 9.30க்கு வீட்டு வேலைகளை ஓரங்கட்டி விட்டு அமரும்படி செய்துவிட்டார் இயக்குனர் ஜீவானந்தம்.
நேற்றைய எபிசோடில் நல்லவனா, கெட்டவனானு தெரியாமல் போய்க் கொண்டிருக்கும் ஞானத்தை தோலுரித்து விட்டார் அவரது மனைவி ரேணுகா. குணசேகரனை சந்திக்க ஜெயிலுக்கு மூன்று தம்பிகளும், வக்கீலுடன் செல்கின்றனர்.
கதிருக்கு மட்டும் அனுமதி கிடைத்து உள்ளே சென்றுவிட்டார். சக்தி மற்றும் ஞானம் இருவரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் அருகில் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரியிடம் டீ அருந்தும் ஒருவர் ரேணுகாவை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
வால்போஸ்டரில் ரேணுகா நடனமாடும் ஸ்டில் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோஸ்டரில் அவரது ஓனர் படமும் ரேணுகா அருகில் அச்சிட்டு இருக்கின்றனர் . இதனைப் பார்த்துட்டு டீ அருந்தும் நபர் ரேணுகாவின் கேரக்டரை தப்பாக பேசுகிறார்.
அருகில் இருந்த ஞானம் காதில் அந்த அருவருப்பான வார்த்தைகள் விழவே அவர் அந்த நபரை அடித்து துரத்துகிறார். ஆக்ரோசத்துடன் வீட்டுக்கு வந்த ஞானம் ரேணுகாவை தகாத சொற்களால் அவமானப்படுத்துகிறார். இதனை கேட்டு பொங்கி எழுந்த ரேணுகா “நீ சம்பாதித்துக் கொடு உன் கடனை நான் அடைத்துக் கொண்டிருக்கிறேன் வெட்கமா இல்லையா என கேட்டு சாட்டையடி கொடுத்தார்” இதனை கேட்டு ஞானம் கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.