சூர்யா கடின உழைப்பை போட்டும் கங்குவா படம் பெரிய அடியாக அமைந்தது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வெறும் 11 கோடிகள் ஷேர் கொடுத்துள்ளது. 350 கோடிகள் வரை இந்த படத்திற்கு செலவழித்துள்ளனர். இந்தியாவில் இந்த படம் 70 கோடிகளும் வெளிநாட்டில் 30 கோடிகளும் வசூலித்துள்ளது.
கங்குவா படம் மொத்தமாய் 145 கோடிகள் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு சூர்யாவிற்கு 40 கோடிகளும். பாலிவுட்டில் இருந்து வந்த வில்லன் பாபி தியோலுக்கு ஐந்து கோடிகளும் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இந்த படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா கங்குவா படத்தை நம்பி பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்
இப்பொழுது இதே ஞானவேல் ராஜாவின், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், கார்த்தியை வைத்து “வா வாத்தியாரே” என்ற படத்தை எடுத்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“வா வாத்தியாரே” படமும் இப்பொழுது இழுத்துக் கொண்டே போகிறது .பொங்கலுக்கு இந்த படம் வராது எனவும் கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக 150 நாட்கள் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 15 நாட்கள் பாக்கி உள்ளதாம். இதனால் டபுள் மடங்கு செலவு எகிறி வருகிறதாம்.
ஏற்கனவே கங்குவா நஷ்டத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழுந்துள்ளார் ஞானவேல் ராஜா. வா வாத்தியாரே படம் ரிலீஸ் நேரத்தில் கங்குவா படத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் கடனை செட்டில் செய்யும்படி நிற்பார்கள். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்து வருகிறார் ஞானவேல் ராஜா.