ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டிசம்பர் வந்துருச்சு கங்குவா சக்ஸஸ் மீட் எப்ப சார்.. பதிலளிப்பாரா ஞானவேல் ராஜா.?

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் கங்குவா வெளியானது. பெரும் பட்ஜெட்டில் உருவான அப்படம் பயங்கரமாக பிரமோஷன் செய்யப்பட்டது.

ஆனால் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டது என்ற கதையாக படம் போட்ட காசை கூட எடுக்கவில்லை.. அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவில் பயங்கரமாக கலாய்க்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் படத்தின் அதிகபட்ச இரைச்சல் தான். இது பின்னடைவாக மாறிய நிலையில் கடும் விமர்சனங்களும் படத்திற்கு எதிராக மாறியது.

இந்நிலையில் தற்போது உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஞானவேல் ராஜா கங்குவா ஆடியோ விழாவில் ஒரு உறுதி கொடுத்திருந்தார்.

கங்குவா சக்சஸ் மீட் எப்போது

அதாவது இந்த பாசை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள. படத்தின் சக்சஸ் மீட் டிசம்பரில் நடக்கும் அப்போது எடுத்து வாருங்கள்.

அங்கு தியேட்டர் ஓனர்கள் உலக டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவரும் வருவார்கள். அவர்கள் முன் இந்த சக்சஸ் மீட் நடக்கும் என பெருமையாக கூறினார்.

அதனால் ரசிகர்களும் அந்த பாசை பத்திரமாக இப்போதும் வைத்திருக்கின்றனர். இதை குறிப்பிட்ட தியேட்டர் உரிமையாளர் என்னிடம் பாஸ் இருக்கிறது.

டிசம்பரும் வந்துவிட்டது ஆனால் சக்சஸ் மீட் பற்றிய எந்த தகவலும் வரவில்லை என கூறியுள்ளார். இதை நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு ட்ரெண்ட் செய்து மீண்டும் கங்குவாவை கலாய்க்க தொடங்கி விட்டனர்.

ஏற்கனவே ஞானவேல் ராஜா நொந்து போய் இருக்கிறார். அதனால் இந்த கேள்விக்கு அவர் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News