திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிங்கத்தையும் சிறுத்தையும் புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. விஷயத்தை நாசுக்காக கண்டுபிடித்த நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வளவு ஏன் அண்ணன் தயாரிப்பில் கூட கார்த்தி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். ஒரு பக்கம் நடிப்பிலும் மற்றொரு பக்கம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி இரு தரப்பிலும் பண மழை பொழிந்து வருகிறது. மேலும் தற்போது குறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து OTT தளத்திற்கு கொடுத்தும் கல்லா கட்டி வருகிறார்.

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிங்கத்தையும், சிறுத்தையும் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அது வேறு யாருமில்லை ஞானவேல்ராஜா தான். பன்றிக்கு நன்றி சொல்லி இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல்ராஜா சிங்கமும், சிறுத்தையும் தான் எனக்கு நல்ல லாபத்தையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது என கூறினார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன், சிவி குமார் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருக்கு இனிமேல் பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கும் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

நெட்டிசன்கள் பொருத்தவரை வெளிப்படையாக உண்மையை கூறி விடுவார்கள். அந்த மாதிரிதான் ஞானவேல்ராஜா சூர்யா மற்றும் கார்த்தியை புகழ்ந்து தள்ளியதற்கு ஒருசில காரணங்கள் இருக்கிறது என கூறியுள்ளனர்.

Gnanavel Raja
Gnanavel Raja

அது வேற எதுவும் இல்லை ஞானவேல்ராஜா சூர்யா மற்றும் கார்த்திக்கின் நெருங்கிய உறவினர் என்பதால் தான் தங்களது படங்களை தயாரிப்பதற்கு அனுமதித்ததாகவும், மேலும் உறவினர்களை விட்டுக்கொடுக்க முடியாமல் ஞானவேல்ராஜா புகழ்ந்து பேசி வருவதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Trending News