வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எவ்வளவு கழுவி ஊத்தினாலும் வசூல்ல நாங்க தான் கிங்.. கோட் 5வது நாள் வசூல் ரிப்போர்ட்

Goat Collection : விஜய்யின் கோட் வசூல் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நல்ல வசூலை பெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை ஐந்தாவது நாள் வேலை நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகத் தான் வசூல் செய்திருக்கிறது.

ஆனாலும் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை கோட் படம் நெருங்கி இருப்பது படக்குழு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்முறையாக வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் வித்தியாசமான ஒரு படமாக தான் கோட் படம் வெளியாகி இருந்தது.

ஒரு மூணு மணி நேரம் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக கோட் அமைந்தாலும் விஜய்க்கான மாஸ் படமாக அமையவில்லை. இந்நிலையில் முதல் நாள் கோட் படம் 44 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்து வெள்ளிக்கிழமை 25.5 கோடி மட்டுமே வசூல் செய்தது.

கோட் ஐந்தாவது நாள் கலெக்ஷன்

சனிக்கிழமை 33.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 34 கோடியும் வசூலை அள்ளியது. நேற்றைய தினம் வேலை நாள் என்பதால் தியேட்டரில் 58 சதவீத இருக்கைகள் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆகையால் ஐந்தாவது நாளில் 14 கோடி வசூலை கோட் படம் ஈட்டியது.

ஆகையால் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 151 கோடி வசூலை பெற்றது. மேலும் நேற்று நான்காவது நாளில் உலகம் முழுவதும் கோட் படம் 288 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏஜிஎஸ் நிறுவனர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதோடு ஐந்தாவது நாளில் 300 கோடி வசூலில் கோட் படம் இணைந்திருக்கிறது. அடுத்த மாதம் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகும் வரை ஓரளவு தியேட்டரில் கோட் படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூலை குவிக்கும் கோட்

Trending News