Goat Collection: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான கோட் படம் வெளியாகி ஒன்பது நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த வாரம் தமிழில் எந்த படங்களும் வெளியாகாத நிலையில் கோட் படம் தான் ஹவுஸ் ஃபுல்லாக சென்று கொண்டிருக்கிறது.
இதனால் வசூலிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் போட்ட பட்ஜெட்டை எடுத்துள்ளதா என்பதை பார்க்கலாம். கோட் படம் வெளியான முதல் நாளிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது.
ஆனாலும் விஜய் என்ற ஒற்றை ஆளுமைக்காக வசூல் வாரி குவித்து வந்தது. அதன்படி முதல் நாளே கிட்டத்தட்ட 126 கோடி வசூலை அள்ளியது. அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களில் எதிர்பார்த்தது போல் நல்ல வசூலை பெற்றது.
கோட் படத்தின் ஒன்பதாம் நாள் வசூல்
நேற்றைய தினம் ஒன்பதாவது நாள் முடிவில் 190 கோடியை நெருங்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 350 கோடியை இரண்டாவது வாரத்தில் கோட் படம் தொட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் 380 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்த நிலையில் இன்னும் 30 கோடி வசூல் செய்தால் போட்ட பணத்தை எடுத்து விடும்.
இதுபோக சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகியவை பல கோடிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் விற்றதால் இப்போது லாபக் கணக்கில் தான் கோட் படம் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் மிக விரைவில் 500 கோடி வசூலை இப்படம் தொட இருக்கிறது.
மேலும் நேற்றைய தினம் தளபதி 69 படத்திற்கான அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்தது. அதாவது கேவிஎன் புரொடக்ஷன் கடைசியாக விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்க உள்ள நிலையில் எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.
வசூலை அள்ளும் கோட்