Goat Overall Collection: விஜய்யின் கோட் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் செய்த அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டு இருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்கள் எவ்வளவு பட்ஜெட் போட்டும் தயாரிக்க முன் வருகிறது. ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் படத்தை எப்படியும் வெற்றி அடையச் செய்து விடுவார்கள்.
சில படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், ரசிகர்களால் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்து விடுகிறது. இந்நிலையில் விஜய்யின் சம்பளம் 200 கோடி உட்பட கோட் பட்ஜெட் கிட்டத்தட்ட 380 கோடியில் எடுக்கப்பட்டது. வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யின் படத்தை இயக்கியிருந்தார்.
படம் ரசிகர்களிடம் நடுநிலையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. ஆனாலும் விஜய்யின் அபாரமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவ்வாறு நடிப்பு திறமை உடைய விஜய் தளபதி 69 உடன் தனது சினிமா கேரியரை முடித்துக் கொள்வது பலருக்கும் வேதனை அளித்து வருகிறது.
கோட் மொத்த வசூலை அறிவித்த ஏஜிஎஸ்
மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கோட் படம் நல்ல வசூலை பெற்றது. கேரளாவில் மட்டும் விஜய்க்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கோட் படம் 500 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு சில ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
அதாவது கோட் படம் மொத்தமாக உலகம் முழுவதும் 455 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இதை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆனாலும் ஓடிடி உரிமம் மற்றும் டிஜிட்டல் போன்றவற்றின் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
கோட் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு உள்ளது. அதிலும் இப்போது கோட் படம் தான் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது என நெட்பிளிக்ஸ் அறிவித்திருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.