திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பதுங்கி பாய காத்திருக்கும் கோட்.. கன்ஃபார்ம் ஆன வெங்கட் பிரபுவின் சம்பவம்!

GOAT movie Release Confirmed in August month: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு  தற்போது தளபதியுடன் கைகோர்த்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தளபதி தமிழக அரசியலில் கால் பதித்ததில் இருந்து சினிமா மற்றும் அரசியலுக்கான அப்டேட் சுடச்சுட வந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தளபதியின் கோட் பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் மாதம் 14 அன்று  சித்திரை திருநாளை  முன்னிட்டு வெளியிடப்படுகிறது.  

இதனைத் தொடர்ந்து ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோட் படத்தின் டீசர் வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தல், தளபதியின் கடைசி படம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளனர் படக்குழுவினர்.

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து கிராபிக்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என பிளான்  போட்டனர்.

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் ஆல் கோட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைப்பு

எதிர்பாராத விதமாக அல்லு அர்ஜுன் நடித்து பட்டையை கிளப்பிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் ரீசெட்யூல் செய்து  அதாவது புஷ்பா ரிலீஸ் ஆனதற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். 

சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்திருந்த வேளையில் அவர்களும் ரிலீஸ்சை ஜூலை மாதமே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனராம்.

கோட் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் பட குழுவினர்கள். ஆகஸ்ட் மாதம் கண்டிப்பாக கோட்  திரைக்கு வரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுதந்திர தினத்திற்கு முன் அல்லது பின் ஏதாவது ஒரு நாளில் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு வருகின்றனர்.

Trending News