வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹாப்பி பர்த்டே தளபதி.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய GOAT டீம்

Vijay: விஜய் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தி வந்த அவருடைய ரசிகர்கள் இன்று பயங்கர அளப்பறை செய்து வருகின்றனர்.

ஆனால் நேற்றைய தினமே கள்ளக்குறிச்சி சம்பவத்தால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் எங்கள் தளபதி பிறந்தநாளை எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும் என ரசிகர்கள் ட்விட்டர் தளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக கோட் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமும் சரியாக 12.01க்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதுதான் இப்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

விஜய் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

அதன்படி கோட் படத்தில் இடம்பெற்று இருக்கும் முக்கியமான பைக் சேசிங் காட்சி தான் அது. அந்த காட்சியின் மேக்கிங் மற்றும் பிஜிஎம் வேற லெவலில் மிரட்டலாக இருக்கிறது. அதன் இறுதியில் விஜய் அப்பா மகன் என இரண்டு கெட்டப்பில் இருக்கிறார்.

ஒரு விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலும் மற்றொரு விஜய் 30 வயது குறைந்து மிகவும் இளமையான தோற்றத்திலும் இருக்கிறார். சொல்லப்போனால் தளபதியும் இளைய தளபதியும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சி தான் அது.

ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கும் இந்த வீடியோ கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெங்கட் பிரபு தரமான சம்பவத்திற்கு தயாராகி விட்டார் எனவும் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

மேலும் விஜய்க்கு நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இதோடு இல்லாமல் இன்று மாலை கோட் படத்தின் இரண்டாம் பாடலும் வெளிவர இருக்கிறது.

விஜய் பிறந்தநாளால் ரணகளமாகும் சோசியல் மீடியா

Trending News