செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புட்டியை தொட்டதால் கெட்டு போன நடிகர்.. வெங்கட் பிரபு டீம்மை கலைத்த தளபதி

GOAT movie update: 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிறப்பாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் பொருட்டு விஜய் 68 படத்திற்கான டைட்டிலையும் செகண்ட் லுக்கையும் வெளியிட்டது படக்குழு. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதன் சுருக்கமாக GOAT என்கிற ஆங்கில தலைப்பையும் தளபதியின் இரட்டை வேடத்தில் வெளிவந்த செகண்ட் லுக்கையும் பார்த்து ரசிகர்கள் குதுக்கலித்தனர்.

லியோ பட ஷூட்டிங்கின் போதே வெங்கட் பிரபு உடனான விஜய் 68 யில் ஒப்பந்தமானார்  விஜய். கதை கூட கேட்காமல் ஆக்ஷன்களை தவிர்த்து ஜாலியாக படம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் வெங்கட் பிரபுவை தேர்வு செய்தார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் விறுவிறுவென படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெயராம், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா என பல முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமின்றி மோகன், பிரசாந்த் என பலரும் இப்படத்தில் கம்பேக் கொடுத்துள்ளனர்.

விஜய் 68 முடிவான போதே  பிரேம்ஜியை பார்த்து நீ நல்லா சரக்கு அடிப்ப இல்ல, அஜித் ரசிகன் என்றெல்லாம் கூறியுள்ளார். இதனை அறிந்த வெங்கட் பிரபு விஜய்க்கு பிரேம்ஜி நடிப்பது பிடிக்காதோ என்று ஒருவித தயக்கத்துடனே இருந்துள்ளார்.

Also read : விஜய் 68 இல் நாலஞ்சு எக்ஸ்ட்ரா பிட்டுகளை சேர்த்து போட்ட விஜய்.. வசமாக சிக்கி கொண்ட வெங்கட் பிரபு

வெங்கட் பிரபுவோ கேமரா இல்லாமல் கூட படம் எடுப்பார் பிரேம்ஜி இல்லாமல் படம் எடுக்க மாட்டார். விஜய் வெங்கட் பிரபுவிடம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரத்தை கேட்டபோது பிரேம்ஜியின் பெயரை விடுத்து லிஸ்ட்டை கொடுக்க, உன் தம்பி எங்கயான்னு கேட்டு ஆனந்த அதிர்ச்சி அளித்துள்ளார்.

சார் உங்களுக்கு பிடிக்காதுல்ல என்று கூற, யாரு இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பா பிரேம்ஜி இந்த படத்துல நடிக்கணும் என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் விஜய்.  இதைக் கேட்ட வெங்கட் பிரபுக்கோ ஹேப்பியோ ஹேப்பி. கோட் இல் பிரேம்ஜியை காமெடியனாக இல்லாமல் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்கவும் கூறியுள்ளார் விஜய்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோட் படக்குழு இலங்கையை முற்றுகை இட்டுள்ளது. எப்போதும் கிரிக்கெட் விளையாடுற மாதிரி கூட்டத்துடன் கிளம்பும் வெங்கட் பிரபு படக் குழுவினரின் ஜாலியான சலசலப்பு விஜய்க்கு எரிச்சலை உண்டாக்கவே விஜய்யை கூலாக வைத்திருக்கும் நோக்கோடு படக் குழுவில் அனைவரும் சைலன்ஸை மெயின்டைன் பண்ணுகிறார்களாம்.

Also read : படத்தில் சொந்த காரை பயன்படுத்திய 5 நடிகர்கள்.. ஸ்விஃப்ட் காரில் வெங்கட் பிரபுவை அலறவிட்ட அஜித்

Trending News