வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோட் வசூல் புள்ளி விவரம்.. ஏஜிஎஸ்-க்கு கிடைத்த மொத்த லாபம்

Goat Overall Collection: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான கோட் படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வரை 25 நாட்களில் கோட் படம் செய்த மொத்த வசூல் மற்றும் பிசினஸ் ஆகியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோட் படத்தின் பட்ஜெட் 333.15 கோடியாகும். இதில் ரிலீசுக்கு முன்பே கோட் படத்தின் பிசினஸ் 416.25 கோடி. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்த லாபம் 83.10 கோடி ஆகும். தமிழ்நாட்டில் கோட் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் விநியோகம் செய்திருந்தது.

தமிழ்நாட்டில் மட்டும் கோட் படம் 205 கோடி வசூல் செய்திருந்தது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு 110 கோடி ஷேர் கிடைத்திருந்தது. இதன் மூலம் விநியோகஸ்தருக்கு 20 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. கோட் படத்தின் மூலம் கேரளா விநியோகத்திற்கு நஷ்டம் தான் கொடுத்துள்ளது.

கோட் படத்தின் மொத்த கலெக்ஷன்

அதாவது கேரளாவில் இந்த படம் 13. 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதை விநியோகஸ்தர் 16 கோடி கொடுத்து வாங்கி இருந்த நிலையில் 8 கோடி மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் 8 கோடி கோகுலம் மூவிஸுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவிலும் ரோமியோ பிக்சர்ஸ் விநியோகம் செய்த நிலையில் 30 கோடி வசூலை செய்தது. விநியோகஸ்தருக்கு 12 கோடி ஷேர் கிடைத்த நிலையில் ஒரு கோடி ரூபாய் நஷ்டத்தை கொடுத்தது. ஆந்திராவில் மைத்ரி மூவிஸ் கோட் படத்தை வெளியிட்ட நிலையில் 12.4 கோடி வசூலை பெற்றது.

இதன்மூலம் மைத்ரி மூவிஸ்க்கு 7.5 கோடி சேர் கிடைத்தது. நார்த் இந்தியாவில் கோட் படம் வெளியான நிலையில் 26 கோடி வசூல் செய்து 12 கோடி ஷேரை கொடுத்தது. மேலும் இலங்கையில் இந்த படம் 9 கோடி வசூல் செய்த நிலையில் ஷேர் மட்டும் 4 கோடி கிடைத்தது.

உலக அளவில் கோட் படம் 440 கோடி வசூலை பெற்றிருக்கிறது. கோட் படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கடைசியாக 115.60 கோடி நெட் பிராஃபிட் கிடைத்துள்ளது. ஆகையால் இந்நிறுவனம் லாபத்தை தான் பெற்றிருக்கிறது.

வசூல் வேட்டையாடிய விஜய்யின் கோட்

Trending News