திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தாத்தா ஆகப்போற வயசுல அப்பாவான கோபி.. எல்லாம் காலக்கொடுமை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் 50 வயசு கடந்த நிலையில் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கும் கோபி தற்போது தன்னுடைய கல்லூரி காதலி ஆன ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தான் புதிதாக கல்யாணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை போல ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து வருகிறார் கோபி. பல்லு போன வயசுல பக்கோடா சாப்பிட நினைக்கும் கோபிக்கு இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் திட்டிட்டு இருக்கிறார்கள்.

Also Read :ராதிகாவிற்கு பொண்டாட்டியாக மாறிய கோபி.. பல்லு போன வயசுல பால்கோவா சாப்பிட நினைச்ச இப்படித்தான்

மறுபுறம் ஜெனியின் முகத்தில் ஏதோ பொலிவு தெரிகிறது என்ற செல்வி கூறுகிறார். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை, ஓவரா மேக்கப் போட்டு இருப்பேன் என்று ஜெனி கூறுகிறார். இதிலிருந்து ஜெனி தற்போது கருவுற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது.

மேலும் கோபி இரவு தூங்கும்போது மயூ நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா, உங்களை அப்பானு கூப்பிடவா என கோபியிடம் கேட்கிறார். உடனே கோபியும் அப்பா என்றே கூப்பிட சொல்கிறார். பேரன் பேத்தி எடுத்து தாத்தாவாக போற வயசுல, இப்பதான் கோபி அப்பாவாகி உள்ளார்.

Also Read :பிக்பாஸில் சவுண்டு சரோஜாவாக மாறிய நடிகை.. தர லோக்கலாக மாறிய பிக்பாஸ் வீடு

மயூ கோபியை அப்பா என்று கூப்பிட்டவுடன் அவருக்கு இனியாவின் ஞாபகம் வருகிறது. என்னதான் பாக்கியா மீது வெறுப்பு காட்டினாலும் தனது மகள் மீது அளவு கடந்த பிரியத்தை கோபி வைத்துள்ளார். மறுநாள் இனியா மற்றும் மயூ பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடக்கிறது.

அப்போது இனியாவுக்காக பாக்யா பள்ளிக்கு வருகிறார். மேலும் மயூவிற்காக கண்டிப்பாக கோபி வரவேண்டும் என ராதிகா அடம்பிடிக்கிறார். இந்த சமயத்தில் இனியாவின் பிரண்ட்ஸ் கோபி வரவில்லையா என்று கேட்கிறார்கள். அவருக்கு வேலை இருக்கிறது என்று சமாளித்து வைத்துள்ளார்.

ஆனால் மயூ உடன் கோபி வருவதை பார்த்து இனியா அதிர்ச்சியடைகிறார். எல்லோரும் கோபி ஏன் அந்த பொண்ணு உடன் வருகிறார் என்று இனியாவை கேள்வி கேட்கிறார்கள். என்ன சொல்வதென்று தெரியாமல் பாக்யா மற்றும் இனியா இருவரும் பதட்டத்தில் உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இனியாவின் வெறுப்பை கோபி சம்பாதித்து வருகிறார்.

Also Read :கதிரால் அவமானப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெடித்தது அடுத்த பூகம்பம்

Trending News