வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாக்கியாவை படாத பாடுபடுத்தும் ராதிகா.. ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்கும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பங்களில் உள்ள இல்லத்தரசிகள் கொண்டாடும் தொடராக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கோபி குடித்துவிட்டு பாக்யா வீட்டில் இருப்பதால் ராதிகாவும் பெட்டியை தூக்கிக்கிட்டு அங்கே வந்து விடுகிறார். இதை பார்த்த கோபி குடும்பம் அனைவருமே ஷாக் ஆகி ராதிகாவை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

ஆனால் ராதிகா எதற்குமே அசராமல் இனிமேல் நான் இங்கேதான் இருக்கப் போகிறேன் கோபியுடன் வாழ போகிறேன் என்று அடாவடித்தனமாக எல்லாரிடமும் பேசுகிறார். உடனே பாக்கியா இது என்னுடைய வீடு இங்கே நான் தான் இருக்கணும் நீங்க வெளில போங்க என்று கூறுகிறார். அதற்கு கோபி இன்னும் வீடு என்னுடைய பெயரில் தான் இருக்கிறது.நீ மொத்த பணத்தையும் கொடுத்தால் தான் பத்திரத்தை நான் உன் பெயருக்கு மாற்ற முடியும் அதை ஞாபகம் வச்சுக்கோ என்று கூறுகிறார்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

உடனே செழியன் உங்களுக்கு கொடுக்க வேண்டியது இன்னும் 18 லட்சம் தானே அதை நான் தருகிறேன். நீங்க அவங்கள கூப்பிட்டு வெளியில் போங்க என்று சொல்கிறார். அதற்கு ராதிகா தேவை இல்லாம எதுவும் இங்கிருந்து நம்ம பேச வேண்டாம் கோபி நம்ம மேல போகலாம் என்று கோபியை கூட்டிட்டு மாடிக்கு போய் விடுகிறார். ஆனால் எப்பொழுதுமே மூஞ்சிய பாவம் போல வைத்திருக்கும் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்.

பிறகு பாக்கியாவிற்கு ஆறுதல் கூறும் படி இரண்டு மகன்கள் மற்றும் இனியா நீ எதற்கும் கவலைப்படாத நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். உடனே பாக்யாவின் மாமியார் நீ எனக்கு சத்தியம் செய்து கொடு எந்தக் காரணத்திற்காகவும் வீட்டை விட்டும் எங்களை விட்டும் வெளியிலே போகமாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இதுவரை பாக்கியாவிற்காக எந்தவித சப்போர்டும் செய்யாத செழியன் கூட அம்மாவின் பக்கம் நிற்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

அத்துடன் பாக்கியவின் பாசத்தை புரிந்து கொள்ளாத இனியா தற்போது பாக்யாவிடம் நீ ரொம்ப பாவம் அம்மா எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறாய் என்று எனக்குப் புரிகிறது. அப்பா ஏன் இவ்வளவு தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்காரு என்று தெரியவில்லை என்று கூறுகிறார். இதை எல்லாம் பார்க்கும் பொழுது இனிமேல் பாக்கியா வீட்டில் தான் கோபி ராதிகா இருக்கப் போகிறார்கள் என்று தெரிகிறது.

இதுவரை ராதிகா வெளியிலிருந்து தான் பாக்கியாவிற்கு டார்ச்சர் கொடுத்தார். இனி வீட்டிற்குள் வந்து ஒவ்வொரு நாளும் படாத பாடுபடுத்தப் போகிறார். ஆனாலும் எதற்கும் அஞ்சாத பாக்கியா அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கண்டிப்பாக ஏதாவது செய்வார். இவ்வளவு நடந்தும் ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டிருக்கும் கோபியின் நிலைமை எப்படி இருக்கும் என்றால் இரண்டு மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் நிலைமைதான்.

Also read: கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீனாவின் அப்பா.. துணிந்து சவால் விட்ட தனம்

Trending News