புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகும் கோபி.. தலை தப்பிய பாக்யா

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மாட்டிக்கிட்யே பங்கு என்பது போல கோபி பாக்யாவை சிக்கலில் மாட்டி விடுவதாக நினைத்துக்கொண்டு மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகிறார்.

அதாவது ஒரு ஆக்சிடென்ட் கேசில் சிக்கி இருக்கும் பாக்யா லைசன்ஸ் கிடைத்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபி பாக்யா வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் லைசன்ஸை திருடிவிட்டு வருகிறார்.

Also Read : பெரிய நடிகர்களுக்கு கூட வராத யோசனை.. சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா

அமிர்தா மற்றும் தாத்தா இருவரும் வீட்டையே தலைகீழாக மாற்றி தேடிப் பார்த்தாலும் லைசன்ஸ் கிடைக்கவில்லை என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் கோபி தனது நண்பருடன் ஒரு ஹோட்டலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது எதர்ச்சியாக அங்கு பழனிச்சாமியும் வருகிறார்.

இந்நிலையில் பாக்யா மேதாவி போல எல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் இன்று அவள் மாட்டிக் கொள்வதைப் பார்த்து சந்தோஷமடைய போகிறேன் என்று பாக்யாவின் லைசன்சை கசக்கி போட்டுவிட்டு கோபி செல்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமி கீழே விழுந்த லைசன்ஸை போட்டோ எடுத்து இனியாவுக்கு அனுப்பி விடுகிறார்.

Also Read : பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

இதற்கு முன்னதாகவே லைசென்ஸ் இல்லை என்பதால் பாக்யாவை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முற்படுகிறார்கள். அப்போது சரியாக இனியா தனது போனில் வந்த லைசன்ஸை காண்பித்து பாக்யாவை காப்பாற்றுகிறார். அப்போது மற்றொரு போலீஸ் சிசிடிவி கேமராவை பார்த்து காரின் முன்னே சைக்கிளில் வந்த தாத்தாவின் மீது தான் தப்பு என்று கூறுகிறார்.

இதனால் ஒரு வழியாக தலை தப்புகிறார் பாக்யா. இதைத்தொடர்ந்து தனது மகள் இனியாவுக்கு கோபி போன் செய்து நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா என்று விசாரிக்கிறார். அதன் பிறகு தான் பாக்யா காப்பாற்றப்பட்ட விஷயம் கோபிக்கு தெரியவரா இருக்கிறது. அதன் பிறகு லைசன்ஸ் எப்படி பழனிச்சாமி கைவசம் சென்றது என்று விசாரிக்கும் போது கோபியின் மானம் மொத்த குடும்பத்தில் முன்னால் போக இருக்கிறது.

Also Read : விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு போனது இதுக்கு தானா?. மட்டமான வேலை செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

Trending News