செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கோபின்னு ஒரு ஆளே இல்ல, அட்ரஸ் இல்லாமல் அவமானப்படும் அங்கிள்.. அசிங்கப்படுத்தும் பாக்யா, வெறுப்பில் ராதிகா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது காமெடி கலந்த பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. சாதாரணமாகவே கோபி கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தற்போது ரெண்டு பொண்டாட்டி காரணாக படாத பாடுபட்டு வருகிறார் கோபி.

இந்நிலையில் கோபிக்கு ஒரு போஸ்ட் வந்த நிலையில் இந்த வீட்டில் கோபி என்று ஒரு ஆளே இல்லை என ராமமூர்த்தி கூறிவிட்டார். எதர்ச்சையாக வெளியில் வந்த கோபி போஸ்ட்மேனை பார்த்து எனக்கு லெட்டர் வந்துள்ளதா என்று கேட்டுள்ளார்.

Also Read : கன்னத்தை பழுக்க வைத்த கண்ணம்மா.. அம்பலமானது திருட்டு கல்யாணம்

உடனே கோபி என்ற பெயருக்கு வந்திருக்கு, ஆனா அந்த வீட்ல அப்படி யாரும் இல்லன்னு சொல்லிட்டாங்க என போஸ்ட்மேன் கூறுகிறார். இதைக் கேட்டு கோபி ஆத்திரமடைந்து வீட்டுக்கு வந்து ராதிகாவிடம் புலம்பித் தவிக்கிறார். மேலும் உங்கள் ரேஷன் கார்டில் அட்ரஸ் மாத்துங்க என ராதிகா கூறுகிறார்.

ரேஷன் கார்டு பாக்யா வீட்டில் இருப்பதால் கோபி அவருக்கு போன் செய்கிறார். அப்போது ஏன் அட்ரஸ்ஸா மாத்தி சொன்னீங்க என கோபி கேட்க எனக்கு அட்ரஸ் மாத்தி சொல்ற பழக்கம் கிடையாது என கோபியை மேலும் அசிங்கப்படுத்துகிறார் பாக்யா. எல்லாமே திமிரு திமிரு என பாக்யாவை கண்டபடி திட்டுகிறார் கோபி.

Also Read : கைகலப்பில் ஈடுபட்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

மேலும் ரேஷன் கார்டு எனக்கு வேணும் எடுத்துகுடு என கோபி கேட்க, அது எல்லாம் மாமாவுக்கு தான் தெரியும் என பாக்யா கூறுகிறார். இதைத்தொடர்ந்து பாக்கியா உடன் போனில் பேசிய கோபியை பார்த்து வெறுப்படைகிறார் ராதிகா.

உங்களுக்கு ரேஷன் கார்டு வேணும்னா உங்க அம்மா, அப்பா யாருக்காவது போன் பண்ண வேண்டியதுதானே. என் பாக்யாவுக்கு பண்ணிட்டு இவ்ளோ நேரம் பேசுறீங்க என கோபி மீது வெறுப்பை கொட்டுகிறார் ராதிகா. கல்யாணமான புதிதிலே கோபிக்கு இந்த நிலைமை என்றால் போகப் போக என்னென்ன அனுபவிக்கப் போகிறாரோ.

Also Read : விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

Trending News