வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாக்யாவைப் பார்த்து வாய் அடைத்துப் போய் நிற்கும் கோபி அங்கிள்.. சைக்கோ டார்ச்சருக்கு முடிவு கட்டும் மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கொஞ்சம் கொஞ்சமாக சொந்த கல்லில் நின்னு பாக்கியா ஜெயித்துக் கொண்டே வருகிறார். எப்படியாவது கவர்மெண்ட் பொருட்காட்சி ஆர்டரை எடுத்து அதன் மூலம் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போக வேண்டும் என்று படாத பாடுபட்ட பாக்யாவிற்கு தற்போது விடிவுகாலம் பிறந்து விட்டது.

பொருட்காட்சியில் ஆரோக்கியமான சத்தான உணவுகளை சேர்த்து சுவையாக கொடுத்து பாக்கியா சமையல் ஆர்டரை அனைவரும் பாராட்டும்படியாக நடத்திக் காட்டி விட்டார். அந்த வகையில் பொருட்காட்சிக்கு கலெக்டர் நேரடியாக வந்து பாக்யாவிற்கு பாராட்டுகளையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். இதை டிவியில் பார்த்த கோபி மூஞ்சியில் ஈ ஆடவில்லை.

அதிலும் கோபியின் அம்மா பாக்யாவை இந்த நிலைமையில் பார்த்ததும் அவரே அறியாமலே கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. இதை பார்த்த கோபிக்கு எங்கே மறுபடியும் நம்மை விட்டு பாக்யாவிற்கு சப்போர்ட்டாக போய்விடுவார்கள் என்ற பயத்தில் கதி கலங்கி போய் நிற்கிறார். அடுத்து செழியன், பாக்கியா விருது வாங்கும் வீடியோவை ஜெனிக்கு அனுப்பி வைக்கிறார்.

Also read: தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி

ஜெனியும் பார்த்து சந்தோஷத்தில் செழியனுக்கு பதில் மெசேஜ் கொடுக்கிறார். இதை பார்த்த சந்தோஷத்தில் செழியனுக்கு எப்படியும் ஜெனி நம்முடன் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அடுத்தபடியாக பொருட்காட்சி இடத்தில் பாக்யா ஒட்டுமொத்த குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கே பழனிச்சாமியும் இருந்து பாக்யாவை பாராட்டுகிறார்.

இந்த நேரத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் பொருட்காட்சிக்குள் நுழைந்து விடுகிறார். இவரை பார்த்த பாக்கியா அங்கு இருப்பவர்கள் அனைவரையும் போக சொல்லி விடுகிறார். அத்துடன் கணேஷ்னிடம் பாக்யா பேசுவதற்கு போகிறார். எப்படி கணேசன் ஒரு முட்டாள்தனமான நினைப்புடன் பாக்யாவை பிளாக்மெயில் பண்ணுகிறார் என்பதுதான் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.

கணேஷன் வந்து கூப்பிட்டால் அமிர்தா உடனே போய்விடுவார் என்று தப்பு கணக்கு போட்டு பாக்யாவை துன்புறுத்துகிறார். இதற்கு அடுத்தபடியாக இந்த ஒரு விஷயம் அமிர்தாவிற்கு தெரிய போகிறது. தெரிந்ததும் அமிர்தாவை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார். சைக்கோ தனமாக கணேஷ் நினைக்கும் எண்ணத்திற்கு சரியான பதிலடி கொடுத்து மூஞ்சியில் கறியை பூசப் போகிறார் அமிர்தா.

Also read: பிக்பாஸில் சம்பளத்துடன் ஹனிமூன் கொண்டாடும் ஜோடி.. கொளுத்திப்போட்ட வத்திக்குச்சி வனிதா

Trending News