செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயனின் கண்ணீரைத் துடைக்க போகும் சாமி.. அயலானுக்காக தேடிப் போய் சரண்டர் ஆன சம்பவம்

Sivakarthikeyan: ஒருவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்தால் அவருடைய நேரம் நல்லா இருக்கிறது என்று சொல்வார்கள். அதுவே ஒரு சில தோல்விகளையும், சிக்கல்களையும் சந்தித்து வரும் பொழுது இவருடைய கெட்ட நேரம் இவரை இந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்று வாய் கூசாமல் உடனே சொல்லி விடுவார்கள். இதில் தற்போது சிவகார்த்திகேயன் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்.

அதாவது யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன். அத்துடன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நல்ல இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அப்படிப்பட்ட இவருடைய பெயர் டேமேஜ் ஆகும் அளவிற்கு சமீபத்தில் இவர் சிக்கிக்கொண்டார்.

இதனாலேயே துவண்டு போயிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு விஷயத்திலும் பரிதவித்து வருகிறார். அதாவது ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் அயலான் படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார். இப்படி இருக்கும் பட்சத்தில் படபிடிப்பு முடிந்த நிலையிலும் இப்பொழுது வரை ரிலீஸ் ஆகாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது.

Also read: சர்ச்சையிலும் சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் 6 படங்கள்.. ரஜினியுடன் கைகோர்க்கும் சிஷ்யன்

இந்த சுழலில் இப்படத்தை தூசி தட்டி மறுபடியும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் பொங்கலுக்கு வரும் என்று அறிவிப்பு விட்டிருந்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் கடன் பிரச்சினையால் இந்த படம் தற்போதும் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் விட்டது. அதாவது 27 கோடி மற்றும் 14 கோடி என இரண்டு படங்களில் கடன் மேல் கடன் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நேரத்தில் அயலான் படத்தை வெளியிட்டால் கடனை எப்படி சமாளிக்க முடியும், விநியோகஸ்தர்களையும் எப்படி சமாளிக்க முடியும் என்று திக்கு முக்காடி வருகிறார். அந்த வகையில் கடைசியாக ஆத்ம பாண்டவரை சந்தித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று உதயநிதி இடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். அதாவது எல்லா பிரச்சினையும் அவரிடம் சொல்லி இருக்கிறார்.

உதயநிதியும் சிவகார்த்திகேயனின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக ஆறுதலாக பேசியிருக்கிறார். அத்துடன் என்னால் முடிந்த எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் தற்போது உதயநிதி மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இதை சரி செய்து விட்டு உதயநிதி கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் விதமாக உதவியை செய்வார். அதனால் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.

Also read: மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை.. சம்பளம் கொடுக்க துப்பு இல்ல, சிவகார்த்திகேயன் கூட்டாளியின் சர்ச்சை பேச்சு

Trending News