Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் போட்ட பிளான் என்னவென்றால் சரவணன் மாமா முழுமையாக நம் பேச்சைக் கேட்டு நம் என்ன சொன்னாலும் ஆடுற பொம்மையாக இருக்க வேண்டும் என்று வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இவருடைய ஆசைப்படி பாக்கியம் கொடுத்த ஐடியா நீங்கள் இரண்டு பேரும் ஹனிமூன்க்கு போயிட்டு வந்தால் மாப்பிள்ளை நீ என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுவார் என்று கூறியிருந்தார்.
அதன்படி தங்கமயில் போட்ட பிளானை பாக்கியம் கமுக்கமாக வந்து பாண்டியனிடம் பேசி சரவணன் மற்றும் தங்கமயிலும் ஹனிமூன் போவதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இதையெல்லாம் பார்த்த பழனிச்சாமி, சரியான நேரத்தில் பாண்டியனிடம் பேசும் விதமாக சரவணனை மட்டும் ஹனிமூன் அனுப்பி வைத்தால் அது என்ன நியாயம். அவனே மாறிதான செந்திலும் கதிரும் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.
பாண்டியனுக்கு அதிர்ச்சி கொடுத்த கோமதி
அதனால் அவர்களையும் சேர்த்து ஹனிமூன் அனுப்பி வையுங்கள் என்று பாண்டியனிடம் சொல்றார். இதை கேட்ட பாண்டியன், சரவணன் என் பேச்சை தட்டாமல் நான் என்ன சொன்னாலும் செய்யக் கூடியவன். அதனால் நான் அவனுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன். இவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படணும் என்று செந்தில் மற்றும் கதிர் முன்னாடியே தெனாவட்டாக சொல்கிறார். இவர் இப்படி பேசியதை கேட்டு கதிர் மற்றும் செந்தில் முகம் வாடிப் போய்விட்டது.
ஆனால் இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பழனிச்சாமி, கோமதி இடம் மச்சானுக்கு பெத்த பிள்ளைகளை சமமாக நடத்த தெரியவில்லை. அவன் அப்படி இருக்கான் இப்படி இருக்கான் என்று சொல்லி மச்சானே பேசி பசங்களுக்குள்ள சண்டையை இழுத்து பிரச்சனையை பண்ணி விடுவார் போல இருக்கு என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.
உடனே கோமதி ஆவேசமாக கொந்தளித்து நேராக பாண்டியன் கடைக்கு போய் விடுகிறார். அங்கே அனைவரும் முன்னிலையிலும் ஏங்க பிள்ளைகளை ஒரே மாதிரி நடத்த மாட்டீங்களா, பிள்ளைகளுக்கு நடுவே நீங்களே இப்படி ஒரு பாகுபாடை காட்டி குடும்பத்தில் பிரச்சினை உண்டாக்கி விடுவீர்கள். இதனால் அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுற மாதிரி ஆச்சுன்னா நல்லாவா இருக்கும் என்று பாண்டியனிடம் கோபத்தை காட்டுகிறார்.
அதற்கு பாண்டியன், இப்போது என்னை என்னதான் பண்ண சொல்லுகிறாய் என்று கேட்கிறார். உடனே கோமதி அவங்க மூணு பேரையும் பொண்டாட்டியுடன் சேர்ந்து ஹனிமூன்க்கு அனுப்பி வைக்க வேண்டும் என பாண்டியனிடம் கரராக பேசுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான பாண்டியன் வேறு வழியிலே இதற்கு சம்மதம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
அதனால் தங்கமயில் ஆசைப்பட்ட மாதிரி ஹனிமூன் போவார், ஆனால் கூடவே மீனா செந்தில், கதிர் மற்றும் ராஜியும் சேர்ந்து போவார்கள். ஆக மொத்தத்தில் தங்கமயில் போட்ட பிளான் அனைத்தும் ஊத்தி மூடப் போகிறது. கடைசியில் ஹனிமூன், ஃபேமிலி பிக்னிக்காக மாறப் போகிறது. எது எப்படியோ தங்கமயில் நினைத்தபடி எதுவும் நடக்கப் போவதில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- அண்ணனுக்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கும் கதிர்
- ஆசை மருமகளுக்காக ஓகே சொன்ன பாண்டியன்
- தங்கமயிலை மிஞ்சும் அளவிற்கு சம்பவம் செய்த பாண்டியனின் மருமகள்கள்