Vetrimaran: சின்னத்திரை தொடர்களில் இப்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் தான். இதில் முத்து, மீனா காம்போ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் முத்துவாக வசந்த் நடிக்கும் நிலையில் மீனாவாக கோமதி பிரியா நடித்து வருகிறார். தெலுங்கு தொடரில் நடித்து பிரபலமான இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இது தவிர மலையாள தொடரிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்ததை பற்றி கூறியிருக்கிறார். அதாவது வெற்றிமாறன் இயக்கதில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் ஆடிஷனில் கோமதி பிரியா கலந்து கொண்டாராம்.
வெற்றிமாறன் பட வாய்ப்பு மறுத்த கோமதி பிரியா
அதில் இவர் தேர்வாகிவிட்டார். ஆனால் அப்போது தெலுங்கு தொடரில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்திருந்தார்.
மேலும் வெற்றிமாறன் பட வாய்ப்பு நழுவ விட்டதை எண்ணி தான் வருத்தப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஏனென்றால் சின்னத்திரை தனக்கு பேரும், புகழையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.
இதுவே தனக்கு மனநிறைவாகவும் உள்ளது என அந்த பேட்டியில் கோமதி பிரியா கூறியிருக்கிறார். மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.