புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எல்லா பிரச்சனையும் கதிர் தலையில் போட்டுட்டு எஸ்கேப் ஆகும் கோமதி.. பாக்யா நடத்தப் போகும் நாடகம்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், எலியும் பூனையும் ஆக இருந்த கதிர் மற்றும் ராஜி திருமணம் எதிர்பார்த்தபடி நடந்து விட்டது. அதுவும் பாண்டியனுக்கு தெரியாமல் அண்ணனின் மானத்திற்காகவும், குடும்ப நலனுக்காகவும் கோமதி தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து கதிர் மற்றும் ராஜியை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்து கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறார்.

தற்போது கதிரை வீட்டிற்கு கூட்டிட்டு போயி பாண்டியன் முன்னாடி நிப்பாட்டுவதற்கு தைரியம் இல்லாமல் பாக்யாவிடம் உதவி கேட்டிருக்கிறார். அதாவது மீனா மற்றும் கோமதி முதலில் வீட்டிற்கு போகிறார்கள். அதன்பின் பின்னாடியே பாக்யா அவர்களை அங்கே கொண்டு வந்து விடுமாறு கேட்டிருக்கிறார். உடனே பாக்யாவும், எழிலும் கதிர் மற்றும் ராஜியை அழைத்துக் கொண்டு ஊருக்கு போகிறார்கள்.

இதற்கு இடையில் கோமதி மற்றும் மீனா வீட்டிற்கு போனதும் பாண்டியன் கதிர் எங்கே என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாத கோமதி அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார். அடுத்து மீனாவிடம் கேட்கிறார் மீனாவும் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். இதனை தொடர்ந்து பாக்யா அவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் பாண்டியன் மற்றும் ராஜி குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாக நிற்கிறார்கள்.

Also read: டிஆர்பி-யில் பட்டைய கிளப்பும் டாப் 6 சீரியல்கள்.. மீண்டும் சன், விஜய் டிவியுடன் ரேஸில் இணைந்த ஜீ தமிழ்

அதே நேரத்தில் அங்கே ராதிகா, கோபி மற்றும் இனியாவும் இருக்கிறார்கள். பிறகு பாக்கியாவை பார்த்ததும் அவர்களும் நீ எப்படி இங்க, இவர்கள் யார் என்று உனக்கு எப்படி தெரியும் நீ ஏன் திருமணம் பண்ணி வைத்தாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பாக்யாவும் முழித்துக் கொண்டிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் எல்லா பிரச்சனையும் கதிர் மேல் தான் விழப்போகிறது. சும்மாவே பாண்டியன் கதிரை கண்டால் ஓவராக ஆடுவார். தற்போது இந்த ஒரு தவறையும் செய்துவிட்டார் என்று தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து என்னென்ன பிரச்சனை எல்லாம் பண்ணப் போகிறாரோ. ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது கோமதி தான் என்ற உண்மை பாண்டியனுக்கு தெரிய வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: கோர்ட்டுக்கு வந்து ஆஜராகிய தர்ஷினி.. எல்லாத்துக்கும் காரணம் இந்த குணசேகரன், நிரூபிக்க போகும் தோழர்

Trending News