புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதிருக்கு ராஜியை திருமணம் செய்து புருஷன் மானத்தை வாங்கிய கோமதி.. இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்ல இருந்திருக்கலாம்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், கதிர் ராஜி திருமணத்தை நடத்தி வைத்து எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்த வருகிறார் கோமதி. இதில் பாக்கியா இரண்டு குடும்பத்தையும் சமாதானப்படுத்தும் விதமாக பேசுகிறார். ஆனாலும் ராஜி குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

அத்துடன் நகையும் பணத்தையும் எங்கே என்று ராஜியின் சித்தப்பா கேட்கிறார். அதற்கு கதிர் எல்லாத்தையும் எடுத்தும் நான் தான் செலவு செய்துவிட்டேன் என்று கூறுகிறார். உடனே ராஜி அம்மா, இப்படிப்பட்ட ஒருத்தனை நம்பியா நீ போனாய் என்று கேட்கிறார். அத்துடன் ராஜியின் சித்தப்பாவும் இதுதான் சான்ஸ் என்று பாண்டியன் மீது பழி தூக்கி போடுகிறார்.

உங்க அப்பாவால இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது என்று உன்ன வைத்து இந்த மாதிரி திருட்டு வேலையை பார்த்து விட்டாரா என்று வாய்ப்பு சாமான் மொத்த பழியையும் பாண்டியன் மீது போட்டு அனைவரது முன்னாடியும் அவமானப்படுத்துகிறார். ஆனாலும் வாயை திறக்காமல் கோமதி மற்றும் ராஜி சோளக்காட்டு பொம்மையாகவே நின்னு வேடிக்கை பார்க்கிறார்கள்.

Also read: முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

பிறகு ராஜி அப்பா, நீ இப்பவும் என்னுடைய மகளாகத்தான் இருப்பாய். தயவுசெய்து அவன் கட்டின தாலியை தூக்கி எறிந்து விட்டு என்னுடைய மகளா வீட்டுக்கு வா. நாங்கள் யாரும் இதைப் பற்றி எதுவும் உன்னிடம் பேசி கஷ்டப்படுத்த மாட்டோம் என்று பாசமாக கூப்பிடுகிறார். ஆனால் பாக்கியா, நீங்க பார்த்த மாப்பிள்ளை வேண்டாம் என்றுதான் அவன் ஆசைப்பட்ட மாதிரி கதிர் கூட கல்யாணம் பண்ணிக்கிட்டா. இனிமேல் எப்படி வர முடியும் என்று சொல்கிறார்.

ஆக மொத்தத்தில் இந்த திருட்டு கல்யாணத்தை பண்ணி வைத்த கோமதியால் பாண்டியன் அனைவரது முன்னாடியும் தலை குனிந்து நிற்கும்படி ஆகிவிட்டது. ஒருவேளை ராஜி கதிரை கல்யாணம் பண்ணாமல் வீட்டில் நடந்ததை சொல்லி இருந்தால் கூட இவ்வளவு தூரம் ஒரு பிரச்சினையாக வெடித்திருக்காது. பிறகு பாக்கியா ராஜி மற்றும் கதிரை பாண்டியன் வீட்டிற்குள் கூட்டிட்டு போய் விடுகிறார்.

அத்துடன் ராஜிடம் இந்த குடும்பம் தான் உன்னுடைய குடும்பம். எல்லாரும் உனக்காகத்தான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இதை மனதில் வைத்து கடைசி வரை உண்மையாக இரு என்று சொல்லி கிளம்பி விடுகிறார். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பாண்டியன் மற்றும் சரவணன் அனைவரும் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் இதுல சரவணன் மட்டும் அப்பா பேச்சைக் கேட்டு காதலை தியாகம் செய்து தற்போது தனி மரமாக நிற்கிறார்.

Also read: பெத்த மகளை கடத்தி அராஜகம் செய்யும் குணசேகரன்.. வாடிவாசலை தாண்டியதால் ஜெயிலுக்கு போன 4 பெண்கள்

Trending News