புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சரவணனின் கல்யாணத்தில் கும்மி அடிக்கப் போகும் மச்சான்கள்.. அப்பாவை வெளுத்து வாங்கும் ராஜி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், மீனா நல்ல மருமகளாக அனைத்து கடமைகளையும் சரிவர செய்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி மூத்த மச்சானுக்கு எப்படியாவது கல்யாணத்தை பண்ணி வைத்து குடும்பத்தில் இருப்பவர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார்.

அதற்காக மறுபடியும் மேட்ரிமோனி மூலம் இரண்டு வரன்கள் வந்திருக்கிறது என்று கோமதி இடம் சொல்கிறார். கோமதி இந்த மேட்ரிமோனி சம்பந்தமே வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் மீனா, எப்படியோ சமாதானப்படுத்தி பேச வைக்கிறார். அப்படி பொண்ணு வீட்டில் பேசிய பொழுது, கல்யாணத்துக்கு பிறகு மாப்பிள்ளையும் பொண்ணும் தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதனால் கோபப்பட்டு கோமதி சண்டை போட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு இன்னொரு வரன் இருக்கிறது என்று பாண்டியனை பேச வைக்கிறார். அந்த வரனும் சரியில்லாததால் பாண்டியன் இனி இந்த மேட்ரிமோனி மூலம் பொண்ணு பார்க்க வேண்டாம் என்று கரராக சொல்லிவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து கல்யாண வைபோகம் என்ற நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு சரண்யா ஜோடி சேரப் போகிறார். இதைத் தெரிந்து கொண்ட கோமதியின் அண்ணன்கள் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி பாண்டியனை அசிங்கப்படுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்யப் போகிறார்கள்.

லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் ராஜி

அதற்கேற்ற மாதிரி கோமதியின் அண்ணன்களுக்கு தூரத்து சொந்தக்காரர்களாக சரண்யா குடும்பம் அறிமுகமாக போகிறார்கள். அதனால் ஈஸியாக சரவணன் கல்யாணத்தில் கும்மி அடித்து விட்டு நடக்க விடாமல் பண்ணி விடலாம் என்று சக்திவேல் பிளான் பண்ணுகிறார்.

ஆனால் இவர்களுடைய பிளான்களை முறியடிக்கும் விதமாக ராஜி அப்பா என்று கூட பார்க்காமல் புகுந்த வீட்டுக்காகவும், சரவணனின் சந்தோஷத்திற்காகவும் நல்லா வச்சி செய்யப் போகிறார். இதனை தொடர்ந்து இந்த கல்யாணம் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடக்கப் போகிறது.

அப்பொழுது ராஜியின் உண்மையான மனசையும் காதலையும் புரிந்து கொண்டு கதிர் கொஞ்சம் கொஞ்சமாக ராஜி மீது காதலில் விழப் போகிறார். சரவணனுக்கு கல்யாணம் ஆகும் பொழுது ராஜி மற்றும் கதிரும் காதலில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

Trending News