அஜித் நடிக்கப் போகும் குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் தினமும் ஏதோ ஒரு செய்தியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஷூட்டிங் எப்பொழுது தொடங்கப் போகிறார்கள்? தொலைக்காட்சி உரிமையை யார் பெற்றார்கள்? ஓடிடி யாருக்கு? என்ற செய்திகள் பரவலாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு மாசாக குட் பேட் அக்லி என்ற படத்தின் டைட்டில் வெளியிட்டார். அந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். தற்பொழுது இந்த படம் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கலாம் என்றும் அடுத்த பொங்கல் அன்று ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பொதுவாக ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை என அனைத்தும் விற்பனை செய்து அதற்கான அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டுதான் படத்தை ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள்.
அந்த வகையில் ஓடிடி ரைட்ஸ், தொலைக்காட்சி உரிமை என அனைத்தும் இந்நேரம் கண்டிப்பாக புக் செய்து இருப்பது உண்மைதான். ஆனால் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதா? அல்லது netflix பெற்றுள்ளதா? என்பதில் சற்று குழப்பங்கள் இருக்கிறது. இதனை பட நிர்வாகம் கூறினால்தான் சரியாக இருக்கும்.
குட் பேட் அக்லி தொலைக்காட்சி உரிமை
அடுத்து தொலைக்காட்சி, கண்டிப்பாக தொலைக்காட்சி உரிமையை சன் டிவி அல்லது கலைஞர் டிவி தான் பெற வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் ஆளுங்கட்சி. மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் சன் டிவி நிறுவனமே வாங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சன் டிவி செய்யும் மார்க்கெட்டிங்க்கு படம் சுமாராக இருந்தாவே அது சூப்பர் டூப்பர் ஹிட் தான். படம் சூப்பராக இருந்தால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக ரெக்கார்ட் பிரேக் தான்.
படத்தின் அறிவிப்பை சைலண்டாக அஜித் வெளியிட்டார். ஆனால் அவரோ அவருடைய ஆபரேஷன் முடிந்து பைக் ட்ரிப் கிளம்பிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் காடு, மலை என மஞ்சம்மல் பாய்ஸ் மாதிரி போட்டோக்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள் விடாமுயற்சி படக்குழு.