சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

குருட்டு நம்பிக்கையில் மொத்தத்தையும் இழந்த குட் பேட் அக்லி டீம்.. அஜித்துக்கு சாத்தப்படும் சட்டர்

விடாமுயற்சி படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. முதல் நாள் 60 கோடிகள் வசூல் செய்தது, எப்படி பார்த்தாலும் இன்னும் இந்த படம் 80 கோடிகள் வரை வசூல் செய்யும், ஆக மொத்தம் 140 கோடிகளைத் தாண்டும் என கணித்து வருகின்றனர்.

இந்த படத்தால் லைக்காவிற்கு நஷ்டம் ஏற்படும் என கூறி வருகிறார்கள். ஆனால் லைக்கா நிறுவனமோ முதலுக்கு மோசம் இல்லாமல் கலெக்ட் ஆனால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. விடாமுயற்சி படத்தை நம்பி தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி டீம் இருந்து வந்தனர்.

குட் பேட் அக்லி படம் 275 கோடி ரூபாயில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது ஏப்ரல் 10 அல்லது மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 162 கோடிகள். இயக்குனர் ஆதி ரவிச்சந்திரனுக்கு 10 கோடிகள். மீதமுள்ளது தயாரிப்பு செலவு.

இவர்கள் விடாமுயற்சி படம் சூப்பர் ஹிட்டானால் குட் பேட் அக்லி படத்தின் வியாபாரம் நன்றாக இருக்கும் என மனக்கோட்டை போட்டு வந்தனர். ஆனால் இப்பொழுது இந்த படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே குட் பேட் அக்லி படம் சரியாக வியாபாரமாகாமல் 75 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாம்.

இப்பொழுது தியேட்டர் லாபத்தை மட்டும் தான் நம்பி இருக்கிறது ஆதிக் ரவிச்சந்திரன் டீம். விடாமுயற்சி விமர்சனத்தால் இந்த படத்தின் வியாபாரம் நிச்சயமாக டல் அடிக்கும். மொத்தத்தில் லைகாவிற்கு மட்டும் இது அடி இல்லை. குட் பேட் அக்லி தயாரிப்பாளர்களாகிய மைதிலி மூவி மேக்கர்ஸ்க்கும் அடி தான்.

Trending News