ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

அஜித்தை பற்றி தெரியாமல் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்.. குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை

அஜித் மற்றும் ஆதித்ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் 80% முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து அஜித்துடன் நயன்தாரா இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஸ்வாசம் படத்திற்கு பின் இவர்கள் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் இவர்களை தவிர அர்ஜுன், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் ஆரவ், ரெஜினா கசான்ரா போன்றவர்களும் நடிக்கிறார்கள். அஜித் இந்த படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இது ஒரு தெலுங்கு தயாரிப்பு நிறுவனம். அவர்களுக்கு அஜித்தை பற்றி முழுவதுமாக தெரியாது. அஜித் அவர் நடிக்கும் எந்த ஒரு படத்தின் ப்ரோமோசனுக்கும் வரமாட்டார் என்பது தற்போது தான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் தினமும் புதுப்புது ஆர்டிஸ்ட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது தெலுங்கு சினிமா உலகில் பீக்கில் இருக்கும் நடிகர் சுனிலை இந்த படத்தில் இணைத்துள்ளனர் படக் குழுவினர். புஷ்பா மற்றும் ஜெய்லர் படத்தால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம் குவிந்துள்ளனர்

மைதிலி மூவி மேக்கர் நயன்தாரா மற்றும் சுனிலை வைத்து இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை செய்யலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள். அஜித் சைடிலிருந்து அவர்களுக்கு எந்த ஒரு பிரமோஷன் சம்பந்தப்பட்ட வேலைகள் நடக்காது என்பது இப்பொழுது தான் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Trending News