Ajith: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் உருவாகி உள்ளது.
இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் தான் இந்த படத்தை தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் குட் பேட் அக்லி படம் உருவாகி இருக்கிறது.
இந்த வருடம் விடாமுயற்சி தான் கைவிட்டது இந்த படமாவது அஜித் ரசிகர்களை கொண்டாடும் விதமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதே 500 கோடி வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.
அதிக தியேட்டரில் வெளியாகும் குட் பேட் அக்லி படம்
அதாவது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டரில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளதாம். பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்களை முதல் சோவே பார்க்க வேண்டும் அதிகாலையில் தியேட்டர் வாசலில் கிடையாய் கிடப்பார்கள்.
அந்த வகையில் ரசிகர்களுக்கு ஏதுவாக குட்பேடு அட்லி படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார். மேலும் ஆயிரம் தியேட்டரில் படம் வெளியானால் கண்டிப்பாக 500 கோடி வசூலை குட் பேட் அக்லி படம் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்துடன் வெளியாக இருந்த தனுஷின் இட்லி கடை படம் இப்போது தாமதமாக வெளியாக இருக்கிறது. அதனால் அஜித் படத்தின் வசூலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகையால் குட் பேட் அட்லி படம் நின்னு விளையாடப் போகிறது.