புதன்கிழமை, ஜனவரி 1, 2025

சினிமாவில் ஒழுக்கத்தால் முன்னேறிய 8 நடிகர்கள்.. விஜய், அஜித்திலிருந்து விக்ரம் பிரபு வரை

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். ஆனால் ஒருசில நடிகர்கள் மட்டும் தான் ரசிகர்களை தாண்டி திரைத்துறை பிரபலங்களிடம் நல்ல பெயரை வாங்கி உள்ளனர்

படங்களில் வில்லத்தனமாக நடிப்பது, குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது மற்றும் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதை வைத்து ஒருவருடைய கதாபாத்திரத்தை முடிவு பண்ணக்கூடாது.

ஏனென்றால் படத்திற்காக பல நடிகர்களும் இதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சரியான நேரத்திற்கு வருவது மற்றும் சக நடிகர்களுடன் பழகுவதை வைத்து நல்ல நடிகர் என பெயர் பெற்ற நடிகர்களை பற்றி பார்ப்போம்.

விஜய்

vijay-cinemapettai
vijay-cinemapettai

நடிகர் விஜய் பொருத்தவரை அனைவருக்கும் தெரியும் இவர் ஒரு அமைதியான மனிதர் என்பது படத்தில் ஆக்ரோஷமான காட்சி நடித்தாலும் நிஜத்தில் மிகவும் அமைதியான மனிதர். இதனை பல பிரபலங்களும் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது பெற்றோரான எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் சோபனா அவர்களின் வளர்ப்பு தான். அதுமட்டுமில்லாமல் ஒன்னும் தெரியாத குழந்தைபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார் எனவும் கூறியுள்ளனர்.

அஜித் குமார்

Ajith-Kumar

அஜித் குமார் எப்போதும் சக நடிகர்களுக்கும் தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் தவறியதில்லை அந்த அளவிற்கு மிகவும் எளிமையான மனிதர் என பலரிடமும் பெயர் பெற்றுள்ளார்.

சிவாஜி கணேசன்

sivaji
sivaji

நடிகர் திலகம் என மக்களால் மகுடம் சூட்டப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன். இவர் திரைத்துறையின் மேல் இருந்த பற்றும் ஆர்வம் காரணத்தால் எப்போதுமே படப்பிடிப்புத் தளத்திற்கு சரியான நேரத்தில் வருவது மற்றும் தன்னால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக சரியாக நடந்து கொள்வார் எனவும் பலரும் கூறியுள்ளனர்.

பிரபு

prabhu
prabhu

சிவாஜி கணேசன் பெரிய நடிகராக இருந்தாலும் பெரிய நடிகரின் மகன் என்பதை எப்போதும் பிரபு சக நடிகர்களுடன் காட்டிக்கொள்ள மாட்டார் என பல பிரபலங்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

விக்ரம் பிரபு

vikram-prabhu-cinemapettai-01
vikram-prabhu-cinemapettai-01

விக்ரம்பிரபு தனது தாத்தா மற்றும் அப்பா மிகப்பெரிய நடிகர் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளமாட்டார் என பலரும் கூறியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் துல்கர் சல்மான் ஒருமுறை நானும் விக்ரம் பிரபுவும் நடிப்பிற்காக ஒரே பள்ளியில் படித்து இருந்தோம்.

அப்போது விக்ரம்பிரபு நடிகரின் மகன் என்பதை காட்டிக் கொள்ளவில்லை என கூறியுள்ளார். பின்பு அவரது விக்ரம் பிரபு என்ற பெயரை வைத்துதான் பிரபுவின் மகன் என்பதை நான் கண்டுபிடித்தேன் எனவும் கூறியுள்ளார்.

ஜெய்சங்கர் மற்றும் சிவகுமார்

jai shankar sivakumar
jai shankar sivakumar

சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஜெய்சங்கர் மற்றும் சிவகுமார் ஒரு முக்கிய நடிகர்களாக வலம் வந்தனர் இவர்கள் இருவரும் எப்போதுமே சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்வார்கள் என பலரும் கூறியுள்ளனர்.

விஜய் சேதுபதி

Vijaysethupathi

விஜய் சேதுபதியும் பல வருடங்களாக சினிமாவில் பணியாற்றினாலும் ஒரு சில வருடங்கள் முன்புதான் பெரிய நடிகராக சினிமாவில் வெற்றிபெற்றார். இவரும் படப்பிடிப்பு தளத்தில் சரியான நேரத்திற்கு வந்து விடுவார் என பலரும் கூறியுள்ளனர்.

மேற்கண்ட நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் சரியான நேரத்திற்கு வருவது மட்டுமில்லாமல் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வார்கள் எனவும் பல பிரபலங்களும் கூறியுள்ளனர்.

Trending News