இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக வரக்கூடிய வீரர்களுள் ஒருவர் அம்பத்தி ராயுடு. தன்னுடைய முன் கோபத்தினாலும், தன் அவசர புத்தியினாலும் எல்லாத்தையும் இழந்தார். அவர் இந்திய அணியில் விளையாடிய குறுகிய காலத்திலேயே நிறைய நல்ல பெயர்களை சம்பாதித்து அதன் பின் அனைத்தையும் இழந்து விட்டார்.
ஆரம்பத்தில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு அந்த அணியின் பயிற்சியாளர் ரஞ்சிவ் யாதவ்வுடன் சண்டையிட்டு அணியில் இருந்து விலகி உள்ளார். அதன்பின் ஆந்திரா அணியில் இணைந்த அவர் ஹைதராபாத் அணிக்கும், ஆந்திரா அணிக்கும் நடந்த போட்டி ஒன்றில் ஐதராபாத் அணியின் கேப்டன் அர்ஜுன் யாதவிடம் சண்டையிட்டு உள்ளார்.
இப்படி சென்ற இடமெல்லாம் சண்டை வந்ததாலும், அணியில் சரிவர இடம் கிடைக்காததாலும், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ராயுடு ஐசிஎல் போட்டிகளில் விளையாட சென்று விட்டார். அப்போது ஐசிஎல் போட்டிகளில் விளையாடினால் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாது என்று அனைவரும் கூறியும் கூட, உதாசீனப்படுத்திவிட்டு சென்றுவிட்டார்.
2004ஆம் ஆண்டு அம்பத்தி ராய்டுவுடன் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஆர்பி சிங், ஷிகர் தவான் அனைவரும் இந்திய அணிக்கு தேர்வாகினர். ராயுடுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் 2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் அம்பத்தி ராயுடு நன்றாக விளையாடியதால், இவர் இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2012ஆம்ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹெர்செல் பட்டேல் என்ற வீரருடன் சண்டையிட்டு தன் பெயரை கெடுத்துக் கொண்டார்.
அம்பத்தி ராயுடு பல பிரச்சனைகளைத் தாண்டி 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். அந்த சமயத்தில் இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பயர்யுடன் சண்டையிட்டு மாட்டிக்கொண்டார். பின்னர் 2016 ஹர்பஜன்சிங்யுடன் சண்டை, 2018 அம்பயர்யுடன் சண்டை என அனைத்து இடத்திலும் பிரச்சனை செய்தார் ராயுடு.
இந்த சமயத்தில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இவருக்கு பதிலாக தமிழக வீரரான விஜய் சங்கரை தேர்வு செய்ததில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர் பிசிசிஐயிடமும் பிரச்சனை செய்தார். விஜய் சங்கர் பில்டிங், பவுலிங், பேட்டிங் என அனைத்தையும் செய்யக்கூடியவர் என்பதால் அவரை 3டி பிளேயர் என்ற அடையாளத்தினால் இந்திய அணிக்கு தேர்வு செய்தது பிசிசிஐ. இதனை கிண்டல் செய்யும் விதமாக அம்பத்தி ராயுடு நான் 3டி கண்ணாடி போட்டுக்கொண்டுதான் போட்டியை காண்பேன் என்று பிசிசிஐ கேலி செய்தார்.
உலக கோப்பை போட்டிகளில் ரிசர்வுடு வீரரான ராயுடுவை, இந்திய அணியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதிலும் கூட, இவர் செய்த செயலால் இவரை நிராகரித்தது பிசிசிஐ. இப்படிப் பல சர்ச்சைகளில் சிக்கிய ராயுடு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2019 ஆகஸ்ட் மாதம் நான் இந்திய அணிக்காக திரும்பவும் விளையாட ஆசைப்படுகிறேன் என தெரிவித்து தன்னுடைய அவசரத்தனத்தை மற்றுமொரு முறை நிரூபித்துள்ளார்.