சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

பழைய ஹீரோ பார்முலாவை கையில் எடுத்து சக்சஸ் பண்ணிய மணிகண்டன்.. குடும்பஸ்தனுக்கு பின்னால் உள்ள ரகசியம்

குட் நைட் மணிகண்டனின் வெற்றிக்கு பின் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் இவருக்கு 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படத்தின் மூலம் தான் ஒரு நடிகராக அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்திற்கு பின் இவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான் .

பீட்சா 2, இன்று நேற்று நாளை , இந்தியா பாகிஸ்தான் , எட்டு தோட்டாக்கள் என ஏகப்பட்ட படங்கள் நடித்திருந்தாலும் ஜெய் பீம் படத்தில் இவர் நேற்று நடித்திருந்த ராசாகண்ணு கதாபாத்திரம் தான் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது. அதற்குப் பிறகு துண்டு துக்கடா கதாபாத்திரம் பண்ணிக்கிட்டு இருந்தவர் முழு நேர ஹீரோவாக மாறினார்.

குட் நைட், லவ்வர்,குடும்பஸ்தன் என இவர் வரிசையில் படங்கள் குவிய தொடங்கியது. இதில் குட் நைட் படம் மற்றும் குடும்பஸ்தன் படம் இவரை தரமான ஹீரோ என ஒரு இடத்திற்கு கொண்டு போய் உள்ளது. பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிற இவரது தோற்றமும், நடிப்பும், வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறது.

மணிகண்டன் பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர், டப்பிங் ஆர்டிஸ்ட் என வேலை செய்துள்ளார். இவர் பல குரலில் பேசக்கூடிய மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் கூட, தற்போது இவர் நடித்து வெளிவந்திருக்கும் குடும்பஸ்தன் படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட இவர் அதற்கு உண்டான வேலைகளை பார்த்து வருகிறார்.

இவரது நடிப்பை பார்த்தால் பழைய ஹீரோ எஸ் வி சேகர் தான் அனைவரின் நினைவிற்கும் வருகிறது. அவர் நடித்த மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த லைன் ஸ்டோரியை போல தான் இப்பொழுது மணிகண்டனும் கதைகளை தேர்வு செய்து அதகலப்படுத்துகிறார்.

Trending News