திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நாலு கோடி பட்ஜெட்.. குட் நைட் படம் 3 வாரத்தில் செய்த மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்

பல கோடி போட்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் நல்ல வசூலை பெற்ற வரலாறும் உண்டு. அந்த வகையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை குட் நைட் படம் பெற்றுள்ளது.

விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் பீம் நடிகர் மணிகண்டன், மீதா ரகுநாத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதாவது ஐடியில் பணியாற்றி வரும் மணிகண்டன் தனக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் முதல் காதலை இழக்கிறார். இந்த பிரச்சனையை மறைத்து வேறு ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறார்.

Also Read : ஜெய் பீம் மணிகண்டன் எழுத்தாளராக பணியாற்றிய 5 படங்கள்.. அஜித் படத்துக்கு வசனம் எழுதிய ராஜாக்கண்ணு

ஆனால் சத்தம் என்றாலே ஆகாத அந்தப் பெண் தனது கணவனின் குறட்டையால் படாதபாடு பட்டு வருகிறார். இப்படம் மிகவும் கலகலப்பான ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இவ்வாறு காமெடி, எமோஷன் என எது கொடுத்தாலும் மணிகண்டன் பின்னி பெடலெடுத்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் குட் நைட் படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை தொடர்ந்து பெற்று வந்தது. மேலும் இப்படம் 4 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது.

Also Read : காலம் கடந்து வெற்றிவாகை சூடிய மணிகண்டன்.. வாயடைக்க வைத்த நிகழ்வு

கிட்டத்தட்ட மூன்று வாரம் முடிவடைந்த நிலையில் பத்து கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால் எப்படியும் நல்ல வசூலை குட் நைட் படம் பெரும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

சமீபத்தில் இதேபோல் தான் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கவினின் டாடா படமும் நல்ல வசூலை ஈட்டியது. இவ்வாறு குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும், பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்றாலும், நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு இது போன்ற படங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது.

Also Read : பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஹிட்டுக்கு ரெடியாகும் குட்நைட்

Trending News