தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்து, உடலை வருத்தி, சினிமாவில் நடிக்கும் விக்ரம். சில ஆண்டுகளாக விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 1 பாகத்தை தவிர மற்ற படங்கள் கலவையான விமர்சன்ங்களையே பெற்றது.
குறிப்பாக, மகான், இருமுகன், சாமி 2, கோப்ரா, ஸ்கெட்ச், 10 என்றதுக்குள்ள, ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான தங்கலான் படமும் கலவையான விமர்சன்ங்களையே பெற்றது.
இத்தனை உழைப்பை போட்டும் ஏன் விக்ரமுக்கு படம் வெற்றி பெறுவதில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் வீர தீரன் சூரன் படத்தில் நடித்துள்ளார். வரும் 2025 ல் ரிலீசாகவுள்ளது. 2 பாகங்களாக அதிரடி ஆக்சனில் உருவாகியுள்ளது இப்படம்.
ஏற்கனவே பல ஹிட் படங்கள் கொடுத்த விக்ரமின் தில், தூள், சாமி மாதிரி இப்படமும் சூப்பர் எண்டர்டெயினாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஷங்கர், விக்ரம் வாழ்க்கையை காலி பன்ணிட்டாரு
இந்த நிலையில், வலைபேச்சு அந்தணன் யூடியூப் சேனலில் விக்ரம் பற்றி பேசினார். அதில், விக்ரமின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் எடுக்கும் இடைவெளிதான் காரணம்.
உடம்ப குறைக்கிறது, ஏத்தறதுன்னு ரொம்ப கேப் விட்டுட்டாரு. நல்லா பீக்ல இருக்கும்போது, அந்நியன் படத்தை ரொம்ப நாள் எடுத்து ஷங்கர் விக்ரம் வாழ்க்கையை காலி பன்ணிட்டாரு என்று கூறினார்.
ஷங்கர் – விக்ரம் – ஹாரிஸ் ஹெயராஜ் கூட்டணியில், Oscar Films வி. ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான இப்படம் 2005ல் ஜூன் 17 ரிலீசாகி உலகம் முழுவதும் 80 கோடி வசூலித்து சாதனை படைத்தது.