கமல்ஹாசனுடன் இதுவரை இணையாத ஒரே வில்லன் நடிகர்.. மிரட்டியும் கிடைக்காத வாய்ப்பு!

திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணி தொடர்ந்து செய்து கொண்டுவரும் நடிகர் கமலஹாசனுடன் இதுவரை நடித்திராத ஒரு வில்லன் நடிகர் இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அந்த வில்லன் நடிகர் நடிப்பில் மிரட்டியும் கமல்ஹாசன் அவருக்கு இதுவரை வாய்ப்பே கொடுக்கவில்லையாம்.

ரஜினி, பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், கார்த்திக் என 90 காலக்கட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பினால் திரையில் பார்வையாளர்களை மிரட்டி வைத்திருந்த இந்த வில்லன் நடிகர் கமலுடன் கை கோர்க்கவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் ஆஸ்தான வில்லன் கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் விஜயகாந்திற்கு மட்டுமில்லாமல் அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் தான் அந்த திரைப்படத்தி வில்லனாக வந்த மன்சூர் அலி கான்.

அசத்தாரியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் தோணியிலான முகபாவனை, சில படங்களில் கேஷுவல் ஆனா வில்லன் என அந்த காலக்கட்டத்தில் டிமாண்டான வில்லன் இவர். மிகப்பெரிய நட்சத்திரங்களோடு திரையில் மிரட்டிய இவர் இன்று வரை கமல்ஹாசனுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

அப்போது வில்லனாக மிரட்டிய இவர், இப்போது தன்னுடைய எதார்த்த பேச்சினால் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகிறார். இவர் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை என்றாலும், பல ஆண்டுகளுக்கு பிறகு கமலுக்கு வெற்றிப்படமாக வந்த விக்ரம் திரைப்படத்தில், மன்சூர் அலி கான் நடனமாடிய ‘சக்கு சக்கு வாத்திக்குச்சி’ பாடல் இடம்பெற்று ரசிகர்களிடையே மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது லோகேஷ் கனகராஜ்க்கு மன்சூர் அலிகான் ரொம்ப பிடித்த  நடிகர் என அவரே தெரிவித்துள்ளார். இதனால் அடுத்து வர உள்ள படங்களில் கண்டிப்பாக லோகேஷ்-கமல் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் 2ம் பாகத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.