கூகுள் பே சின்ன பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை இப்பொழுது இந்தியாவில் கூகுள் பே கொடி கட்டி பறந்து வருகிறது. ஆரம்பத்தில் பல சலுகைகளை இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. ஆனால் தற்போது இது முற்றிலும் பண வர்த்தகத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
இந்த செயலி மூலம் சுலபமாக பணம் ஒருவரது அக்கவுண்டில் இருந்து மற்றவருக்கு அனுப்பலாம். நாளுக்கு நாள் இந்த செயலி அன்றாட தேவைகளுக்காகவும், அத்தியாவசியங்களுக்காகவும் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்த செயலியை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.
ஜூன் 4-ம் தேதி முதல் உலக நாடுகள் பலவற்றில் இந்த செயலி பயன்படாது என கூகுள் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 180 நாடுகளில் கூகுள் பே பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். மேலும் கூகுள் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை வேற அக்கவுண்டுக்கு மாற்றும் படியும் அறிவுறுத்துகிறது.
2 நாடுகளை தவிர ஜூன் மாதம் மொத்தமாய் போடும் எண்டு கார்டு
அமெரிக்காவில் கூகுள் பே செயலியை விட கூகுள் வாலட்டின் பயன்பாடுகள் தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாற்று ஏற்பாடு. ஆனால் இது இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இப்பொழுது இல்லை என்று அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இந்த செயலியை இங்கே தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலும் கூகுள் வாலட்டை அறிமுகப்படுத்தி பயன்பெறுமாறு நடவடிக்கை எடுப்பார்களாம்.
முதற்கட்டமாக ஜூன் 4 முதல் 150 நாடுகளில் இந்த செயலி நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக நாம் புதிய கூகுள் வாலட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கூகுள் சமீபத்தில் சந்தித்த அதிர்ச்சியான சில சம்பவங்கள்
- டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக கோடிகளை வாரி இறைத்த கட்சிகள், கூகுள் ரிப்போர்ட்
- கூகுள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வந்த ChatGPT
- சுந்தர் பிச்சையின் சம்பளத்திற்கு ஆப்பு வைத்த கூகுள்