Google Report: நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கும் நிலையில் கூகுள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த தேர்தலில் பெரும் கட்சிகள் அனைத்தும் டிஜிட்டல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வந்தனர். அதாவது இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் வந்ததை நாம் கவனித்திருப்போம்.
![report-google](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/report-google.webp)
அதிலும் பிரச்சாரம் ஆரம்பித்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 17 வரையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பல கோடிகள் இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. அதை கூகுள் மற்றும் மெட்டா தனித்தனியாக ஒரு டேட்டாவாக தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.
டிஜிட்டல் பிரச்சாரம்
அதன்படி google ad transparency மற்றும் meta ad libraury report என்ற பெயரில் வெளியாகி உள்ளது. அதில் பாஜக மற்றும் திமுக இரு கட்சிகள் தான் போட்டி போட்டு பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.
![survey-report](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அதில் இந்தியா முழுக்க இருக்கும் அனைத்து கட்சிகளும் இந்தப் பிரச்சாரத்திற்காக செலவு செய்த மொத்த தொகை 55,97,56,000 ஆகும். இதில் மொத்தம் 1,11,086 விளம்பரங்கள் இருக்கின்றன.
இதில் பாஜக கிட்டத்தட்ட 16 கோடி வரை செலவு செய்திருக்கின்றனர். அதேபோல் திமுக 14 கோடியும் காங்கிரஸ் 11 கோடியும் செலவு செய்திருக்கின்றனர்.
கூகுள் வெளியிட்ட ரிப்போர்ட்
இது அனைத்தும் இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தான். இது தவிர மற்ற கட்சிகளும் டிஜிட்டல் பிரச்சார விளம்பரத்திற்காக சில கோடிகளை செலவு செய்திருக்கின்றனர்.
அந்த வகையில் கட்சி தொடர்பான விளம்பர வீடியோக்கள், ட்ரோல் வீடியோக்கள் போன்றவை இதில் அடங்கும். மேலும் இந்த விவரங்களை கூகுள் கிராஃப் மூலம் தெளிவாக காட்டியுள்ளனர்.
அதில் மோடி மற்றும் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது இந்த கிராஃப் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அந்த நாட்களில் விளம்பரங்களுக்காக அதிக செலவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இப்படி புது யுக்தியை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி இருக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விட இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நல்ல விஷயமாக தான் இருக்கிறது.