மனக்கோளத்தில் பாக்கியா, கோபி.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!

Vijay Tv: விஜய் டிவியில் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது பாக்கியலட்சுமி தொடர். ஆனால் இப்போது இதுபோன்ற ஒரு அருமையான சீரியலை இல்லை என்பது போல போய்க்கொண்டிருக்கிறது.

எப்போதுதான் இந்த சீரியலுக்கு எந்த கார்டு போடுவார்கள் என்று ரசிகர்கள் இயக்குனரை வறுத்தெடுத்து வருகின்றனர். அண்ணா இதுக்கு இல்லையே ஒரு எண்டு என்று தொடர் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது பாக்யாவின் மகள் இனியா மற்றும் செல்வியின் மகன் இருவரும் காதலித்தனர். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்து மிகப்பெரிய பூதாகரமாக வெடித்து விட்டது.

திருமண கோலத்தில் கோபி, பாக்கியா

bhakiyalakshmi
bhakiyalakshmi

அதோடு பாக்யாவின் தொழிலுக்கு குடைச்சல் கொடுக்க புதிய வில்லன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சூழலில் கோபி மற்றும் அவரது அம்மா தனியாக வசித்து வருகிறார். பாக்யா தனது பிள்ளைகளுடன் இருக்கிறார்.

ஆனால் கோபி மற்றும் பாக்கியா இருவரும் மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி அவரை விவாகரத்து செய்து விட்டார்.

மீண்டும் பாக்கியாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட நிலையில் பாக்கியா அதற்கு சம்மதிக்கவில்லை. இப்போது மீண்டும் இருவரும் திருமண கோலத்தில் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

கதையை முடிக்காமல் இப்படியே ஏதாவது இயக்குனர் உருட்டிக் கொண்டிருக்கிறார் என காண்டாகின்றனர் சீரியல் வாசிகள்.

Leave a Comment