ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரெண்டு பிள்ளைகளுடன் கூத்தடிக்கும் கோபி.. பாக்யாவை சமாளிக்க போகும் ராதிகா

Bhakkiyalakshsmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தது. ஆனால் தற்போது உள்ள கதை ஒரு குடும்பம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக தான் நாடகம் நகர்ந்து வருகிறது. அதாவது கோபி எதுக்கெடுத்தாலும் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து ரகளை பண்ணுவதையே வழக்கமாக வைத்திருப்பார்.

அதேபோல தற்போது வீட்டிற்கு போதையுடன் வந்த கோபி கம்பெனி கைவிட்டு போனதை நினைத்து புலம்பி தவிக்கிறார். இதே நேரத்தில் செழியனும் ஜெனியை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அத்துடன் எழிலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் வந்து பிரச்சனை செய்ததை நினைத்து குழப்பத்தில் தத்தளிக்கிறார்.

இப்படி மூன்று பேரும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் கோபி, செழியன் மற்றும் எழில் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அத்துடன் மது அதிகமானதும் கோபி வழக்கம்போல் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்.

Also read: ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதையில் பாக்கியலட்சுமி.. மருமகள் எடுக்கப் போகும் முடிவு என்ன

அந்த நேரத்தில் ராதிகா இவர்கள் பண்ணும் அட்டூழியத்தை பார்த்து விடுகிறார். அப்பொழுது பாக்யாவும், எழில் மற்றும் செழியனை தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். வந்ததும் இவர்கள் இருக்கும் நிலைமையை பார்த்து பாக்யா கோபத்துடன் முழிக்கிறார். ஆனால் இப்பொழுது பாக்கியா என்ன சொன்னாலும் அவர்கள் மண்டையில் ஏறாது என்பதால் அமைதியாக இருந்து விடுகிறார்.

அத்துடன் இதையெல்லாம் பார்த்து கவலைப்படும் பாக்கியாவிடம் ராதிகா சமாதானப்படுத்தும் விதமாக ஆறுதலாக பேசுகிறார். ஆக மொத்தத்தில் பசங்க சோகத்தில் இருந்தாலும் பிரச்சனைகள் வந்தாலும் அவர்களுக்கு ஒரு தீர்வாக மதுவை காட்டுவது ரொம்பவே கண்டிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கோபி தற்போது வேலை இல்லாமல் கம்பெனியை க்ளோஸ் பண்ணிய விஷயம் வீட்டிற்கு தெரியாது. அத்துடன் இதைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமல் ராதிகாவும் கோபியை முழுமையாக நம்பி வருகிறார். கடைசியில் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டும் விதமாக பாக்யா எல்லா பிரச்சனையும் சரி செய்வது போல் குண்டச்சட்டிக்குள்ளையே குதிரை ஓட்டப் போகிறார்கள்.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

Trending News