Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா சொன்னபடி இன்னும் இரண்டு நாட்களில் நாம் இந்த வீட்டை விட்டு கிளம்பி விடுவோம் என்று கோபியிடம் ராதிகா சொல்கிறார். ஆனால் கோபி எந்த காரணத்தை கொண்டும் என் பிள்ளைகளையும் அம்மாவையும் விட்டுட்டு நான் வரமாட்டேன். அதே நேரத்தில் நீயும் மயுவும் என்கூட இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கரராக ராதிகாவிடம் சொல்கிறார்.
இதனால் ராதிகா என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மயூவுக்கு இந்த வீட்டை விட்டு போய்விடுமோ என்ற கவலை வந்துவிடுகிறது. இதை தெரிந்து கொண்ட பாக்கியா, மயூவை சமாதானப்படுத்தும் விதமாக நீ உங்க அப்பா, அம்மா மூன்று பேரும் தனியாக ஒரு வீட்டில் இருந்தால் தான் சந்தோசமாக இருக்க முடியும்.
அதுதான் உன்னுடைய குடும்பம் உங்களுடைய வாழ்க்கைக்கு நிரந்தரமாகவும் இருக்கும் என்று சமாதானப்படுத்துகிறார். அதற்கு மயூ உங்களை பார்க்காமல் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்று கவலையாக சொல்கிறார். உடனே பாக்கியா உனக்கு எப்ப எல்லாம் என்னை பார்க்கணும் பேசணும் என்று தோணுதோ, அப்பொழுது இந்த வீட்டிற்கு நீ தாராளமாக வந்து போகலாம் என்று சொல்கிறார்.
இதனை அடுத்து இனியா, டான்ஸ் போட்டியில் கடைசி சுற்று நடைபெறுவதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கிளம்புகிறார்கள். அப்பொழுது கோபி, அங்கே இருந்த ராதிகாவையும் கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார். ராதிகா வரவில்லை என்று சொல்லியும் கோபி நிச்சயம் வர வேண்டும் என்று ராதிகாவை இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போகிறார்.
அப்படி போனதும் இனியாவின் வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்ட பொழுது என்னுடைய அப்பா அம்மா தான் என்று சொல்லிய நிலையில் அவர்கள் இருவரையும் நான் மேடைக்கு கூப்பிட ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார். உடனே பாக்யா மேடைக்கு போன நிலையில் கோபி மேடைக்கு போகும் பொழுது ராதிகாவையும் கூட்டிட்டு போகிறார். ராதிகா வரமாட்டேன் என்று சொல்லிய பொழுது கோபி வற்புறுத்தி மேடைக்கு கூட்டிட்டு போய்விடுகிறார்.
இதனால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் இனியாவிற்கு இரண்டு அம்மாவா? என்று நக்கல் அடித்து பேசும் அளவிற்கு கலாய்த்து விடுகிறார்கள். இதனால் ராதிகாவும் அங்கே அவமானப்படும் அளவிற்கு ஒரு சூழலை ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் இந்த டான்ஸ் நிகழ்ச்சியிலும் இனியா தோற்றுப் போய் விடுகிறார். அந்த விரக்தியில் வீட்டிற்கு வந்த இனியா, ராதிகாவை பார்த்து உங்களால் தான் நான் தோற்றுப் போய் விட்டேன்.
உங்களை யாரு அங்க வர சொன்னா என்று அவமானப்படுத்தும் அளவிற்கு வார்த்தைகளால் பேசி விடுகிறார். இதையெல்லாம் பார்த்தும் பாக்கியா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரியும் ராதிகாவை மட்டம் தட்டி பேசுகிறார். இதை எல்லாம் பார்த்த கோபி எதுவும் சொல்லாமல் வாயை மூடி கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது சும்மா இருந்த ராதிகாவை தேவையில்லாமல் கூட்டிட்டு போய் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். இனியா பேசிய பேச்சுக்கு எதுவும் சொல்ல முடியாமல் ராதிகாவும் மௌனமாக நின்று விடுகிறார்.