புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ராதிகா வீட்டுக்கு இனியாவை கூட்டிட்டு வந்த கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஏற்பாடு நடந்து வருகிறது. கோபி தன் அம்மா மற்றும் மகள் மீது அதீத பிரியம் வைத்துள்ளார். இதனால் அவர்களை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என்ற நினைப்பு கோபியிடம் இருக்கிறது.

முதலில் கோபியின் அம்மாவை கோயிலில் சந்தித்து நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கோபி கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி இந்த கல்யாணத்தை எப்படி நடத்துறேன்னு பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார்.

Also Read :பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு சிக்கல்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனது மகள் இனியாவை வெளியே அழைத்துச் செல்கிறார் கோபி. மேலும் இனியா தனது அம்மா பாக்யாவுக்கு போன் செய்து என்னை தேட வேண்டாம் அப்பாவுடன் வெளியே செல்கிறேன் என்று திமிராக பேசுகிறார்.

அதன் பின்பு ஒரு வீட்டின் முன் கோபி காரை நிறுத்துகிறார். யார் வீடு என்று இனியா கேட்க, உனக்கு தெரிஞ்சவங்க வீடுதான் என்று கோபி சொல்கிறார். உடனே மயூ, இனியா அக்கா என்று ஓடி வருகிறார், மயூவை பார்த்தவுடனே இனியாவுக்கு முகம் மாறுகிறது.

Also Read :இரு மகள்களுக்கும் வைத்த கெடு.. உண்மையை கக்கிய கண்ணம்மா

மேலும் வீட்டினுள் இனியா போனவுடன் ராதிகா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் இனியாவுக்கு ஒரு நேரடலாகவே இருக்கிறது. ராதிகாவின் அண்ணன் இந்த பொண்ணு யார் என்ன கேட்கிறார், உடனே கோபியோட பொண்ணு தான் என்று ராதிகா சொல்கிறார்.

அந்த இடத்தில் இருக்கவே இனியாவுக்கு பிடிக்காததால் வீட்டில் தேடுவார்கள் நான் கிளம்புறேன் என்று இனியா பிடிவாதமாக இருக்கிறார். என்னதான் அப்பா மீது பாசம் இருந்தாலும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாமல் உள்ளார் இனியா.

Also Read :புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

Trending News