Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஒருவர் பக்கத்தில் இருக்கும் பொழுது அருமை தெரியாது நம்மை விட்டுப் போனதுக்கு பிறகு தான் அவர்களுடைய அருமை புரியும் என்று ஒரு சொலவடை உண்டு. இது போல தான் கோபி பக்கத்திலேயே பாக்கியா இருந்த பொழுது பாக்யாவை ஒரு மனுசியாக கூட கோபி நெனச்சு பார்த்ததில்லை. வேண்டா வெறுப்பாக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஆனாலும் பாக்கியா தன்னுடைய வீட்டுக்காரர் தன் குடும்பம் என்று கோபி பின்னாடியே சுற்றி வந்தார். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் கோபி, ராதிகாவை கல்யாணம் பண்ணியதும் பாக்யா, சுதந்திர பறவையாக சொந்த காலில் நிற்க முடிவு பண்ணிவிட்டார். தனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டும், தன்னை முன்னேற்றி காட்ட வேண்டும். தன் குடும்பத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பாக்கியா சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பித்தார்.
அப்படி பாக்கியா சம்பாதித்த பொழுது தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கிய நிலையில் கோபி, பாக்கியாவின் வளர்ச்சியே கண்டு பொறாமை பட்டு பழிவாங்க பல வழிகளில் துன்புறுத்தினார். கடைசியில் பட்டு தான் திரிய வேண்டும் என்பதற்கு ஏற்ப கோபிக்கு இப்பொழுது தான் ஞானம் பிறந்திருக்கிறது. உடனே பாக்யாவை பற்றி புரிந்து கொண்டு ஈஸ்வரி கூப்பிட்டதும் பாக்ய வீட்டிலேயே வாழ வந்துவிட்டார்.
அதுவும் தன் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக் கொண்ட ராதிகாவையும் மயூவையும் கூட்டிட்டு வந்து விட்டார். இருந்தாலும் தற்போது ராதிகாவை விட பாக்கிய தான் பெஸ்ட் என்று கோபி நினைத்ததால் பாக்யா பின்னாடியே சுற்றி வருகிறார். பாக்கியாவுக்கு சமையலில் ஐடியா கொடுத்தது மட்டுமில்லாமல் அவரே முன்னாடி நின்று சமைக்கவும் ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் பாக்கியா, பம்பரமாக சுற்றி வேலை பார்ப்பதை பார்த்து வாயடைத்து போயி மெய் மறந்து நிற்கிறார். மூச்சு விட நேரமெல்லாம் பாக்கியா பெயர் சொல்லிக்கொண்டு பாக்கிய மனதில் இடம் பிடிப்பதற்கு தூபம் போட ஆரம்பித்து விட்டார். அத்துடன் கோபியின் செயல்களை கண்டு ஒட்டு மொத்த குடும்பமும் கோபியின் கண்ட்ரோலுக்கு வந்துவிட்டது போல் கோபி உண்மையிலேயே திருந்தி விட்டார் பார்க்க நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் கோபியை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
அத்துடன் பாக்கியாவும் ஆச்சரியமாக கோபியை பார்க்கிறார். அந்த வகையில் கோபியின் மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி சும்மா இருக்க முடியாமல் வீட்டிற்கு வந்து ராதிகாவிடம், கோபி மற்றும் பாக்கியாவை ஜோடியாக பார்த்தால் ஊர் கண்ணே பட்டுவிடும். அந்த அளவிற்கு தம்பதிகளாக ஒற்றுமையாக இருந்து சமைப்பதை பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறது.
நீ மட்டும் கோபி வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விட்டால் கோபி பாக்கியவுடன் சந்தோஷமாக வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுவான் என்று ராதிகாவை சீண்டி பார்க்கிறார். இப்படி ஈஸ்வரி ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அதிர்ச்சியாகி ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதில் இருக்கிறதுலேயே பாவம் ராதிகா மட்டும்தான். ஏனென்றால் கோபி ராதிகா பின்னாடி போகும்பொழுது பாக்யாவுக்கு துணையாக ஒட்டுமொத்த குடும்பமும் இருந்தது.
ஆனால் தற்போது கோபி பாக்கியா பின்னாடி நின்றாலும் ராதிகாவுக்கு துணையாக யாரும் இல்லாத போல் தனிமரமாக நின்னு பீல் பண்ணுகிறார். இதற்கு பேசாமல் கெத்தா தனியாக ராதிகா, மகளுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தால் தான் கோபிக்கு சரியான பதிலடியாக இருக்கும்.