வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

50 வயதில் ரூட்டு போட்ட கோபி.. கண்ணே காட்டிக்கொடுக்குது ராதிகா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியேறிய கோபி தற்போது ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அவர் ஹோட்டலில் இருப்பதை பார்த்த ராதிகா, கோபியின் இந்த நிலைமைக்கு நாம் தான் காரணம் என மனம் கலங்குகிறார்.

இதன்பிறகு மிகுந்த குழப்பத்தில் இருக்கும் ராதிகா, பாக்கியலட்சுமி இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என அவர் மீது கோபப்படுகிறார். ஏனென்றால் பாக்யாவிற்காக தான் ராதிகா, கோபியை விட்டு விலகி மும்பைக்கு செல்ல திட்டமிட்டார்.

Also Read: பாக்கியாவால் நடைபிணமாக மாறிய கோபி

இதற்காக படித்துக்கொண்டிருக்கும் தனது மகளையும் கூடவே அழைத்துச் செல்லவும் ராதிகா முடிவெடுத்திருந்தார். ஆனால் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது. கோபிக்கும் பாக்யாவிற்க்கும் விவாகரத்தாகி தற்போது கோபி குடும்பத்தை இழந்து நடுரோட்டில் தவிக்கிறார்.

ஆகையால் அவரை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் ராதிகா வருகிறார். இவர் கோபியை ஏற்றுக்கொண்டார் என்பது அவரது கண்ணே காட்டிக்கொடுக்கிறது. இதற்கு அவருடைய அண்ணன் மற்றும் அம்மா இருவரும் முழு உறுதுணையாக இருப்பதால் இந்த முடிவை துணிச்சலுடன் பாக்யாவையெல்லாம் பொருட்படுத்தாமல் எடுக்கிறார்.

Also Read: 40 லட்சத்திற்கு புருஷனை விற்ற பாக்யா!

இது ஒருபுறமிருக்க இனியாவின் கல்விக்கட்டணம், குடும்ப செலவு, இதைத் தவிர சினிமாவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் எழிலுக்கு பண உதவி என பல்வேறு இக்கட்டான சூழலில் பாக்யா மாட்டிக்கொண்டு முழிக்கிறார். சம்பாதித்துக் கொண்டிருக்கும் மூத்த மகன் செழியன் இதைப்பற்றி எதுக்கும் கவலைப்படாமல், பண உதவி செய்யவும் முன் வராமல் இருக்கிறார்.

இருப்பினும் மனம் தளராத பாக்யா தன்னுடைய கேட்டரிங் தொழிலில் முழு நம்பிக்கையுடன் முயற்சி செலுத்தி முன்னேற போகிறார். பாக்யா சொன்னபடி கோபியிடம் ஒரு வருடத்திற்குள் 40 லட்சத்தையும் செலுத்தி, வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பாக்யாவை கூடிய விரைவில் புரிந்து கொண்டு குடும்பமாக சந்தோசமாக வாழ போகிறார்.

Also Read: 50 வயதில் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி

Trending News