Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் அடித்ததால் ஹாஸ்பிடலில் முடியாமல் செல்வி மகன் ஆகாஷ் இருக்கிறார். அதனால் பாக்கியா, ஹாஸ்பிடல் இருக்கும் ஆகாஷை பார்த்து பேசிவிட்டு செல்வியிடம் மருத்துவமனை செலவிற்காக பணம் கொடுத்து ஆறுதல் படுத்தி வருகிறார். வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்.
அத்துடன் செழியன் பண்ணியதுதான் சரி என்பதற்கு ஏற்ப எல்லோரிடமும் சொல்கிறார். இதனால் செழியன் மற்றும் எழிலுக்கு சண்டை ஆரம்பித்துவிட்டது. அடிதடியில் இறங்கும் அளவிற்கு இரண்டு பேரும் முட்ட ஆரம்பித்து விட்டார்கள். பிறகு பாக்கிய இருவரையும் சமாதானப்படுத்துகிறார். இதற்கெல்லாம் மறைமுகமாக கோபி தான் காரணம் என்று புரிந்து கொண்ட பாக்யா, கோபியிடம் இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறார்.
ஆனால் கோபி என்னால் இந்த வீட்டை விட்டு போக முடியாது என் மகள் இனிய வாழ்க்கையை சரி செய்ய வேண்டும். அந்த கடமை எனக்கு இருக்கிறது என்று சொல்லி பாக்யா நெற்றியில் நாமத்தை போட்டு முழுமையாக ஏமாற்றி விட்டார். பாக்கியா இனி என்ன நினைத்தாலும் கோபியை அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது. அந்த அளவிற்கு தற்போது கோபிக்கு சப்போர்ட்டாக ஜெனி செழியன் மற்றும் ஈஸ்வரி ஒன்று கூடி விட்டார்கள்.
அடுத்ததாக ஈஸ்வரி சும்மா இருக்காமல் இனியாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி சொந்தக்காரங்களை வீட்டுக்கு வர வைக்கிறார். இதனை கேள்விப்பட்ட பாக்கியா என் மகள் வாழ்க்கை விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் அதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கத்துகிறார். உடனே கோபி, அப்பா என்கிற உரிமை எனக்கு இருக்கிறது. அதனால் எந்த முடிவுநாளும் நானும் எடுக்கலாம் என்று சொல்லி பாக்கிய வாயை அடைத்து விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த இனியா அழுதது மட்டுமில்லாமல் முதன்முறையாக உருப்படியான ஒரு விஷயத்தை செய்யப் போகிறார். அதாவது போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி எனக்கு விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை கட்டாயப்படுத்தி பண்ணுகிறார்கள். அதனால் என்னுடைய பாட்டி மற்றும் அப்பாவிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று தகவலை சொல்லி விடுகிறார்.
அடுத்ததாக எதுவும் நடக்காத போல் ஈஸ்வரி சொன்னபடி இனியாவை பார்க்க வந்திருக்கும் குடும்பத்திற்கு முன் இனியா கிளம்பி வந்து நிற்கிறார். ஆனால் அங்கே தான் ஒரு ஆப்பு இருக்கிறது. அதாவது ஈஸ்வரி முகத்தில் கரியை பூசும் விதமாக இனியா செய்த காரியம் ஈஸ்வரி மற்றும் கோபி எதுவும் தலையிடாதபடி போலீஸ் வந்து சம்பவம் செய்யப் போகிறார்கள்.