புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் கோபி.. சைடு கேப்பில் பாக்கியாவின் மகளுக்கு பாயாசத்தை போடும் சக்களத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்பதற்கேற்ப நல்லா இருந்த நாடகம் தற்போது தரங்கெட்டு போய் மோசமான கதையை வைத்து பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி வருகிறது. இதற்கு பேசாமல் இந்த நாடகத்தை சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று தலையில் அடித்து ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு மட்டமான கதையை கொண்டு வருகிறார்கள். அதாவது பாக்கியாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கை அதல பாதாளத்திற்குள் போய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதில் எழில் வாழ்க்கையில் பூகம்பகமாக முன்னாள் அமிர்தாவின் கணவர் உயிருடன் வந்து குடைச்சல் கொடுக்கிறார். இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிந்ததால் கணேசனிடம் போய் அவர்கள் சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.

ஆனால் கணேசன், அமிர்தா என்னுடைய மனைவி, நிலா என் மகள் என்னுடன் இருந்தால் மட்டுமே அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று பைத்தியக்காரன் போல் பேசுகிறார். உடனே பாக்யா எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடு நான் என் குடும்பத்தில் மெதுவாக எல்லா விஷயத்தையும் சொல்லி ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: குணசேகரன் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய நக்கல் ராணி.. ஈஸ்வரியால் மாட்டிக்கொண்ட ஜீவானந்தம்

அந்த வகையில் இந்த ஒரு விஷயத்தை முதலில் எழிலிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று தவித்து வருகிறார். அடுத்தபடியாக செழியன் மாலினிக்கு இடையே ஏதோ விவகாரம் என்று பாக்யாவிற்கு தெரிந்ததால் செழியன் போனை பாக்யா பிடுங்கிவிட்டார். இது தெரியாமல் மாலினி ஒன்றாக இருந்த போட்டோ அனைத்தையும் செழியன் போனிற்கு அனுப்பி வைக்கிறார். இதை பார்த்ததும் பாக்கியா ரொம்பவே அதிர்ச்சியாகி மாலினிக்கு மெசேஜ் பண்ணி கோவிலுக்கு வர வைக்கிறார்.

உடனே மாலினி செழியன் தான் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று அவரை பார்ப்பதற்காக கோயிலுக்கு வருகிறார். ஆனால் அங்கே பாக்கியா மாலினியை பார்த்து என் பையன் இனி உன் வாழ்க்கையில் வரமாட்டான். நீனும் அவனை தொந்தரவு பண்ணக்கூடாது என்று சொல்கிறார். இதை கேட்ட மாலினி சைக்கோ மாதிரி நேரடியாக பாக்கியா வீட்டிற்கு சென்று குடும்பத்தில் அனைவரும் இருக்கும் பொழுது செழியனை கூப்பிடுகிறார்.

அத்துடன் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் கர்ப்பத்திற்கு காரணம் செழியன் தான் என்று குண்டை தூக்கி போடுகிறார். இது இவர் நடத்தும் நாடகமாக கூட இருக்கலாம். இதற்கிடையில் பாக்கியா வீட்டிற்குள் ஆமை மாதிரி உள்ளே புகுந்த கோபி மற்றும் ராதிகா பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடுவது போல் அவ்வப்போது ரொமான்டிக் என்ற பெயரில் கடுப்பேற்றி வருகிறார்கள். அத்துடன் பாக்யாவின் மகள் இனியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இதுதான் சான்ஸ் என்று சைடு கேப்பில் ராதிகா பாசத்தை பாயாசம் மாதிரி ஓவராக காட்டுகிறார்.

Also read: மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்

Trending News