வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

50 வயதிலும் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி.. இந்த பொழப்புக்கு பால்டாயில குடிச்சுடலாம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு ஹோட்டலில் தங்கும் கோபி, எப்படியாவது ராதிகா மனம் மாறி தன்னை வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார் என நம்பி காத்திருக்கிறார். ஆனால் குழப்பத்தில் இருக்கும் ராதிகா கோபியை ஏற்றுக்கொண்டாலும் மறுபுறம் பாக்யாவை நினைத்து தடுமாறுகிறார்.

ராதிகாவாகவே தன்னிடம் வந்து பேசுவார் என ஹோட்டலில் காத்திருந்த கோபி, ஒரு கட்டத்தில் அவர் ராதிகாவை நடுரோட்டில் வைத்து பார்க்கிறார். உடனே ராதிகாவை கையை பிடித்து இழுத்த கோபி, ‘அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக தான் குடும்பத்தை தூக்கி எறிந்து விட்டேன்.

Also Read: 50 வயதில் ரூட்டு போட்ட கோபி

உன்னுடைய மனதிலும் என்னுடன் சேர்ந்து வாழும் ஆசை இருக்கிறதுதானே’ என கேட்க, உடனே ராதிகா ‘ஆமாம்’ என்று சொல்கிறார். பிறகென்ன இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றதும், அதற்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். நான் இன்னமும் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று ராதிகா சொல்கிறார்.

உடனே அதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த கோபி, ‘இவ்வளவு நடந்தும் உனக்கு இன்னும் கால அவகாசம் வேண்டுமா! அப்படி என்றால் நான் செத்துப் போனால் மட்டுமே என்னைப் பற்றி நீ புரிந்து கொள்வாய்’ என்று கோபி கள்ளக்காதலுக்காக சாகத் துணிகிறார்.

Also Read: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாக்யா குடும்பம்

அவரை சமாதானப்படுத்தும் விதமாக ராதிகா, ‘நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும்’ என்று ஆறுதல் கூறுகிறார். இதன்பிறகு ராதிகா, பாக்யாவை சந்தித்துப் பேசப் போகிறார். கோபியை அவர் திருமணம் செய்து கொள்வதால் பாக்யாவிற்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதைக் கேட்டு தெளிவுப்படுத்தப் போகிறார்.

அந்த சமயம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ராதிகாதான் பாக்யாவிற்கு இந்த சீரியலில் வில்லியாக மாறப் போகிறார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ’50 வயதில் கோபி இவ்வளவு ஆட்டம் போடுவதால் அவரைப் பேசாமல் சாக விட்டுவிடு ராதிகா, இந்த பொழப்புக்கு பால்டாயில குடிச்சுடலாம் கோபி’ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

Also Read: பாக்யாவை குத்தி கிழிக்கும் பிள்ளைகள்

Trending News