கோபிக்கு வந்த நெஞ்சு வலி, இனியா எடுக்கப் போகும் முடிவு.. இடையில் புகுந்து குட்டையை கிளப்பும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ஹோட்டலை அபகரிக்க சுதாகர், கோபியை பகடகாயாக பயன்படுத்துகிறார். அதாவது பாக்யாவிடம் எப்படி பேசினாலும் அந்த ஹோட்டலை வாங்க முடியாது என்று முடிவு பண்ணிய சுதாகர், இனியாவை வீட்டின் மருமகளாக ஆக்கிக் கொண்டால் தானாகவே அந்த ஹோட்டல் நமக்கு வந்து விடும் என்று கணக்கு போட்டு இருக்கிறார்.

அதனால் முதலாவதாக விரித்தவளை கோபிக்கு தான். கோபியும் சுதாகர் பெரிய ஆளு, பணம் வசதி இருக்கிறது என்ற ஆசையில் இனியாவை எப்படியாவது கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டார். அந்த வகையில் ஈஸ்வரி மற்றும் செழியன் இடம் சொல்லி அவர்கள் சம்மதத்தையும் வாங்கிக் கொண்டு இனியாவின் கல்யாணத்துக்கு மூன்று பேரும் சேர்ந்து பாக்கியா வீட்டிற்கு பேச போகிறார்கள்.

ஆனால் பாக்யா, எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் இனியா நன்றாக படித்து முடித்துவிட்டு அதன் பிறகு தான் கல்யாணம் என்று சொல்லிவிடுகிறார். உடனே ஈஸ்வரி அதை நீ ஏன் முடிவு பண்ண வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு கோபி, தனியாக இனியாவை பார்த்து கல்யாண விஷயத்தை பேசுகிறார்.

ஆனால் இனியா, கோபி சொல்வதை அலட்சியப்படுத்தும் விதமாக இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். பிறகு இனியா, வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் புலம்புகிறார். அதற்கு பாக்கியா எதுவும் உன்னை மீறி நடக்காது, இப்படித்தான் ஏற்கனவே உனக்கு பிடிக்காத கல்யாணத்தை ஏற்படப் பண்ணினார்கள். ஆனால் நீதானே அதை தடுத்து நிறுத்தினாய்.

இப்பொழுது ஏன் உனக்கு பயம் எதைப் பற்றியும் யோசிக்காமல் நீ உன்னுடைய லட்சியத்தை நோக்கி போ என்று சொல்கிறார். அங்கே வந்த செழியன், இனியாவை பார்த்து நீ சும்மாவே இருக்க மாட்டியா, அப்பா உன்னிடம் பேச வந்தால் நீ அப்பாவை கஷ்டப்படுத்தும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறாய். இதனால் தாங்கிக் கொள்ள முடியாத அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து மயக்கம் வந்துவிட்டது.

இதை பாட்டி சொல்லி என்னிடம் புலம்புகிறார், உன் மீது அப்பா எப்படி இவ்ளோ பாசம் வைத்தார் என்று எனக்கு புரியவில்லை. நீ எல்லாம் அவருடைய பாசத்துக்கு தகுதியே இல்லை என்று திட்டிவிட்டு கோபியை பார்க்கப் போகிறார். உடனே இனியாவும் நானும் வருகிறேன் என்று சொல்லி கோபியை பார்க்க கிளம்பி விடுகிறார். கோபியை பார்த்த நிலைமையில் இனியா, ஓகே சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பாக்கியா இடையில் புகுந்து குட்டை குழப்பும் விதமாக இனிய மனசை மாற்றி ஆகாசுடன் சேர்த்து வைத்துவிடுவார்.