Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்க்க விடாமல் ராதிகாவை ஈஸ்வரி தடுத்து விட்டார். ஆனாலும் ஈஸ்வரி வீட்டிற்கு போன நிலையில் எழில் மட்டும் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது ராதிகா, கோபியை பார்த்து பேசுவதற்கு ரூமுக்கு போய் விடுகிறார். அப்படி ராதிகா கோபியை பார்த்து பேசிய நிலையில் நான் போன் பண்ணும் போது நீங்க யாரும் எடுக்கவே இல்லை.
பாக்கியா தான் போனை எடுத்து என்னை காப்பாற்றி இருக்கிறாள் என்று ராதிகாவிடம் பாக்கியவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அத்துடன் நீ ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று கோபி கேட்கும் பொழுது, நான் பார்க்கணும் என்று எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனால் உங்க அம்மா என்னை பார்க்க விடவே இல்லை பிரச்சனை பண்ணி விட்டாங்க என்று கூறுகிறார்.
அந்த சமயத்தில் ஈஸ்வ,ரி செழியன் மற்றும் இனியா என அனைவரும் வந்து ராதிகா மீதுதான் தவறு இருக்கிறது என்பதற்கேற்ப கோபியிடம் பற்ற வைக்கிறார்கள். அத்துடன் ஈஸ்வரி, ராதிகா சண்டை போட்டுக்கொண்டு உன் உயிரை வாங்கி விடுவாள் என்று சூனியக்கார கிழவியாக பேசி கோபி மனசை மாற்ற முயற்சி எடுக்கிறார். அத்துடன் ராதிகாவையும் ரூமை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
பிறகு ஈஸ்வரி மற்றும் இனியா செண்டிமெண்டாக கோபி இடம் பேசி எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு என்பதற்கு ஏற்ப கோபி மனசை மாற்றி விட்டார்கள். இது தெரியாத ராதிகா, கோபியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு போவதற்கு ஆம்புலன்ஸ் அல்லது காரை ரெடி பண்ணட்டுமா என்று நர்சி இடம் கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி, நீ எதுவும் பண்ண தேவையில்லை நாங்க பார்த்துக்கிடுவோம். என்னுடன் என் மகனை கூட்டிட்டு போறேன் என ராதிகாவிடம் சொல்லி விடுகிறார். இதை பார்த்த எழில், பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி அப்பாவை அங்க தான் கூட்டிட்டு வரப் போறாங்க உனக்கு தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் ஏற்கனவே இதைப்பற்றி முடியாது என்று உங்க பாட்டியிடம் பேசி விட்டேனே.
ஏன் மறுபடியும் இப்படி பண்ணுறாங்க நான் நேரடியாக ஹாஸ்பிடலுக்கு வருகிறேன் என்று சொல்லி பாக்கியா ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார். பிறகு ராதிகா முன்னாடி பாக்கியா, ஈஸ்வரிடம் சண்டை போடும் விதமாக கோபி நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. ராதிகாவுடன் போவது தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி புரியாமல் சண்டை போடும் பட்சத்தில் கோபியிடமே இந்த விஷயத்தை கேட்டுக் கொள்ளலாம் என்று ராதிகா சொல்கிறார்.
உடனே ரூமுக்குள் அனைவரும் போகிறார்கள். ராதிகா நீங்க என்னுடன் தான வரீங்க என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி நீ என்னுடன் நம்ம வீட்டுக்கு வந்துவிடு. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிய நிலையில் கோபி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் பாக்கியா நம்ம வீட்டுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தில் பரிதவித்து நிற்கிறார்.
கடைசியில் கோபி நான் என்னுடைய அம்மாவுடைய போய் விடுகிறேன் என்னை விட்டு விடு ராதிகா என்று சொல்கிறார். உடனே சந்தோஷத்தில் கோபியை கூட்டிட்டு போவதற்காக எல்லாம் ஏற்பாடுகளையும் ஈஸ்வரி செழியன் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். கோபி இப்படி சொல்லுவார் என்று எதிர்பார்க்காத ராதிகா வாயடைத்து போய் ஏமாற்றத்துடன் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போய்விடுகிறார்.
கோபி எப்போதுமே திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப கோபியை நம்பி வந்த ராதிகாவையும் இப்பொழுது ஏமாற்றும் விதமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அதே மாதிரி ஈஸ்வரி யாருடைய பேச்சையும் கேட்காமல் ஈஷ்டத்துக்கு ஆடுவது சகிக்க முடியவில்லை. இந்த பாக்கியாவும் ஈஸ்வரியை தடுக்க முடியாமல் அமைதியாக நின்னு வேடிக்கை பார்க்கிறார்.