புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராதிகா மீது வெறுப்பை கொட்டும் கோபி.. பாக்யா போல் விவாகரத்துக்கு கோர்ட்டுக்கு போகும் சக்காளத்தி

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா வேண்டாம் என்று உதறி தள்ளிட்டு போன கோபி நிலைமை தற்போது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது மனசுக்கு பிடிச்ச பெண், படிச்ச பொண்ணு, நாளும் தெரிந்தவள் ராதிகா தான் என்று துரத்தி துரத்தி காதலித்து கல்யாணத்தையும் பண்ணினார். ஆனால் அப்படிப்பட்ட கல்யாணம் வாழ்க்கை அவருக்கு ஒரு நிம்மதியை கொடுக்காமல் பெருத்த துயரத்தை தான் கொடுத்திருக்கிறது.

எப்பொழுது ராதிகாவை கல்யாணம் பண்ணினாரோ, அப்பொழுது இருந்து ஒரு அடிமை வாழ்க்கையும், டம்மியாகவும் தான் கோபி கதாபாத்திரம் இருக்கிறது. இருந்தாலும் ராதிகா மற்றும் மயூ மீது இருந்த அன்பும் கோபி இடமிருந்து கொஞ்சம் கூட குறையவில்லை. இன்னொரு பக்கம் ஈஸ்வரி காட்டும் அன்புக்கு கோபி எப்பொழுதுமே உண்மையாகத்தான் இருப்பார்.

அதிரடியாக முடிவு எடுக்க போகும் ராதிகா

அந்த வகையில் தனக்கு ஒரு சப்போர்ட் வேண்டும் என்பதற்காக ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து ராதிகா வீட்டில் வைத்திருந்தார். அங்கே ஏற்பட்ட குளறுபடிகளினால் ஈஸ்வரிக்கு அவமானத்தை கொடுத்து கோபி வெளியே அனுப்பி விட்டார். தற்போது அந்த குற்ற உணர்ச்சியில் இருக்கும் கோபியை இன்னும் குத்தி காட்டும் விதமாக ராதிகா மற்றும் அவருடைய அம்மா அவ்வப்போது காயப்படுத்தி பேசுகிறார்கள்.

இதனால் நொந்து நூடில்ஸ் ஆன கோபி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சுயநினைவு இல்லாமல் வருகிறார். ஆனாலும் ராதிகா கோபி மீது கொஞ்சம் கூட அக்கறையும் பாசமும் இல்லாத போல் ஏதோ ஏனோ தானோ என்று இருக்கிறார். அந்த வகையில் நீங்கள் இந்த வீட்டில் இருப்பதும் இல்லாமல் வெளியே போனாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பது போல் கோபியிடம் சொல்லிவிட்டார்.

இதனால் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளான கோபி குடித்துவிட்டு ரோட்டில் பிரச்சனை பண்ணுகிறார். அந்த நேரத்தில் எழில் மற்றும் செழியன் கோபியை பார்க்கிறார்கள். எழில் சும்மா இருந்தாலும் செழியனுக்கு எப்பொழுதுமே கோபி மீது பாசம் அதிகம். அதனால் அப்படியே அப்பாவை விட்டுட்டு போக முடியாது என்று காரில் கூட்டிட்டு வந்து ராதிகா வீட்டில் விடுகிறார்.

அங்கே கோபியை பார்த்ததும் ராதிகா அம்மா வழக்கம்போல் திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் செழியனுக்கு ரொம்பவே கஷ்டமாக போய்விட்டது. உடனே நடந்த விஷயங்கள் அனைத்தையும் பாக்யாவிற்கு தெரியப்படுத்துகிறார்கள். பாக்யா இதெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறார்.

அத்துடன் அத்தையை கூட்டிட்டு போன பாக்கியா, ஈஸ்வரியின் தோழியை வரவழைத்து சந்தோஷப்பட வைக்கிறார். இதனை தொடர்ந்து கோபிக்கு புத்தி தெளிந்ததும் ராதிகா மறுபடியும் சண்டை போடுகிறார். அத்துடன் ராதிகாவின் அம்மாவும் திட்டியதால் கோபி ராதிகாவை மொத்தமாக வெறுக்கும் அளவிற்கு போய்விட்டார். இதனை தொடர்ந்து ராதிகா இனி எனக்கு கோபி தேவையில்லை என்று விவாகரத்து வாங்கலாம் என முடிவுக்கு வரப் போகிறார்.

கடைசியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக கோபி, ராதிகாவை நம்பி பாக்கியாவை விட்டுட்டு வந்ததால் தற்போது யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் நிலை வரப்போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Trending News